அதிர்ச்சி... வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா கட்டணம் இரு மடங்கு உயர்வு!

 
விசா சுற்றுலா விமானம்

வெளிநாட்டு மாணவர்களுக்கான விசா கட்டணத்தை ஆஸ்திரேலியா அரசு இரு மடங்காக உயர்த்தி அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த புதிய விசா கட்டண உயர்வு நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதுவரை  710 ஆஸ்திரேலிய டாலர்களாக இருந்த சர்வதேச மாணவர்களுக்கான விசா கட்டணத்தை தற்போது 1,600 ஆஸ்திரேலிய டாலர்களாக உயர்த்தி உத்தரவிடப்பட்டுள்ளது. இது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.89,118 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், பார்வையாளர் விசா, தற்காலிக பட்டதாரி விசா வைத்திருப்பவர்கள் ஆன்ஷோரில் மாணவர் விசா விண்ணப்பிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

விசா
அந்நாட்டின் வீட்டு வசதித் துறையில் கடுமையான நெருக்கடி நிலை நீடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு காரணம் வெளிநாடுகளில் இருந்து குடியேறுபவர்கள் என கருத்துக்கணிப்புக்கள் வெளியான நிலையில்  அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நகர்வை ஆஸ்திரேலியா முன்னெடுத்துள்ளது. அதன்படி இதுநாள் வரையில் 710 ஆஸ்திரேலிய டாலர்களாக இருந்த சர்வதேச மாணவர்களுக்கான விசா கட்டணம் இனி 1,600 ஆஸ்திரேலிய டாலர்களாக உயர்த்தப்பட்டுள்ளது.  இந்திய ரூபாய் மதிப்பில் கிட்டத்தட்ட ரூ.89,118 ஆகும். மேலும், பார்வையாளர் விசா, தற்காலிக பட்டதாரி விசா வைத்திருப்பவர்கள்  ஆன்ஷோரில் மாணவர் விசா விண்ணப்பிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

விரைவில் நடைமுறைக்கு வரும் இந்த விசா மாற்றங்கள் சர்வதேச கல்வி முறையின் தரம், சிறந்த குடியேற்ற நகர்வுகளை ஆஸ்திரேலியாவுக்கு வழங்கும் என அந்நாட்டின் உள்துறை அமைச்சர் கிளேர் ஓநீல் தெரிவித்துள்ளார்.  மார்ச் மாதம் வெளியான குடியேற்றம் சார்ந்த தரவுகள் தான் இதற்கு காரணமாக அமைந்துள்ளன.  மேலும், வெளிநாட்டு மாணவர்கள் விசா நீட்டிப்பை தவிர்க்கும் வகையில்  நகர்வுகளை ஆஸ்திரேலியா முன்னெடுத்துள்ளது. சர்வதேச நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஆஸ்திரேலியாவில்  கல்வி பயில்வது அந்நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகித்து வருகிறது.   

விசா
சர்வதேச மாணவர்களுக்கான விசா கட்டணத்தை ஆஸ்திரேலியா உயர்த்தியிருப்பது  அதனுடன் இந்த பிரிவில் போட்டியிடும் அமெரிக்கா மற்றும் கனடாவை காட்டிலும் கட்டணம் அதிகம். அமெரிக்காவில் 185 டாலர்கள் கனடாவில் 110 டாலர்களாக விசா கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web