அதிர்ச்சி... 'மேற்குத் தொடர்ச்சி மலை' 'தேன்’ திரைப்பட வசனகர்த்தா காலமானார்!

 
ராசி தங்கதுரை

இயக்குநர் லெனின் பாரதி இயக்கத்தில் வெளியாகி பல விருதுகளை வென்று குவித்த 'மேற்குத் தொடர்ச்சி மலை' படத்திற்கு வசனம் எழுதிய ராசீ தங்கதுரை என்ற தாமஸ் உடல் நலக்குறைவால் ஆண்டிபட்டியில் காலமானார். விருதுகளை வென்று பலரது கவனத்தை ஈர்த்த ‘தேன்’ திரைப்படத்திற்கும் ராசீ தங்கதுரை வசனம் எழுதியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

லெனின் பாரதி இயக்கத்தில் பல புதுமுகங்கள் நடிப்பில், நடிகர் விஜய்சேதுபதி தயாரிப்பில் கடந்த 2018ஆம் ஆண்டு வெளியானத் திரைப்படம் ‘மேற்குத் தொடர்ச்சி மலை’. இதன் கதைக்களமும் வசனங்களும் பார்வையாளர்கள் மட்டுமின்றி திரைப்பட ஆர்வலர்கள் மத்தியிலும் வரவேற்பைப் பெற்றது.

மேற்குத் தொடர்ச்சி மலை

இந்தப் படத்திற்கு வசனம் எழுதியவர் ராசீ தங்கதுரை. ‘மேற்குத் தொடர்ச்சி மலை’, ‘தேன்’ உள்ளிட்ட சில படங்களுக்கும் அவர் வசனம் எழுதியுள்ளார்.

’தேன்’ படத்திற்கு வசனம் எழுதியது மட்டுமல்லாது அந்தப் படத்தில் சிறு கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கவும் செய்திருந்தார். 53 வயதாகும் ராசீ தங்கதுரை உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனில்லாமல் இன்று ஆண்டிப்பட்டியில் காலமானார்.

தேன்

இவரது மறைவு திரைத்துறையினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web