மாஸ் வீடியோ... புயலில் சிக்கிய விராட் கோஹ்லி மனைவியுடன் வீடியோ கால்!

 
விராட் கோலி

அமெரிக்கா மற்றும் கரீபியன் தீவுகளில் நடந்த டி20 உலகக் கோப்பை தொடர் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. ஜூன் 2ஆம் தேதி முதல் ஜூன் 28ஆம் தேதி வரை நடைபெற்ற இந்தத் தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.   தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான பரபரப்பான இறுதிப் போட்டியில் இந்தியா 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது.


கடந்த சனிக்கிழமை இறுதிப் போட்டிகள் நிறைவடைந்ததால் இந்திய அணி ஞாயிற்றுக்கிழமை நாடு திரும்பும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், புயல் காரணமாக அந்நாட்டு அரசு விமான நிலையத்தை தற்காலிகமாக மூடியுள்ளது. அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதன் காரணமாக பார்படாஸில் இருந்து இந்திய அணி புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

'பெரில்' புயல் காரணமாக வீரர்கள் நாடு திரும்ப முடியாமல், அங்குள்ள நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்பட்டனர். ஹோட்டல் அறையில் தங்கியிருந்த விராட் கோலி, பால்கனியில் இருந்து தனது காதல் மனைவி அனுஷ்காவுக்கு வீடியோ கால் செய்தார். பின்னர் அவர் புயலின் கொந்தளிப்பு மற்றும் கடுமையான சூறாவளி காற்றை தனது மனைவி அனுஷ்காவுக்கு வீடியோ அழைப்பு மூலம் நேரடியாக ஒளிபரப்பினார்.

இந்த வீடியோவை விராட் கோலி தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். விராட் கோலியின் இன்ஸ்டாகிராம் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை பெற்று வருகிறது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web