அதிர்ச்சி.. நாய்கள் கூட்டம் தாக்கியதில் பரிதாபமாக பலியான பெண்.. குழந்தைகளுக்கு நேர்ந்த சோகம்!

 
கோர்ட்னி வில்லியம்ஸ்

அமெரிக்காவின் ஜார்ஜியாவின் க்விட்மேன் நகரில் ஒரு பயங்கரமான சம்பவம் அரங்கேறியது. ப்ரூக்ஸ் கவுண்டி நடுநிலைப் பள்ளிக்குப் பின்னால் உள்ள பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த தாய் மற்றும் அவரது மூன்று குழந்தைகளை நாய்கள் கூட்டமாக தாக்கியதில்  தாய் பரிதாபமாக உயிரிழந்தார். 35 வயதான கோர்ட்னி வில்லியம்ஸின் மரணத்தை ஜோர்ஜியா புலனாய்வுப் பிரிவு உறுதிப்படுத்தியது, அவர் அருகிலுள்ள முற்றத்தில் இறந்து கிடந்தார் என்று நியூயார்க் போஸ்ட் தெரிவித்துள்ளது.

வில்லியம்ஸின் குழந்தைகளை நாய்களிடமிருந்து மீட்டு, அங்கிருந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அதிர்ஷ்டவசமாக, கெய்டன் உட்பட மூன்று குழந்தைகளும் குறிப்பிடத்தக்க காயங்களுக்கு உயிர் தப்பினர். இப்போது அவர்கள்  குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.சம்பந்தப்பட்ட நாய்களின் இனம் தெரியவில்லை.

இந்நிலையில், அண்டை வீட்டார் ஒருவர் உள்ளூர் செய்தி நிலையமான WALB க்கு தகவல் கொடுத்தனர்.  சாலையில் சுற்றித் திரியும் நாய்களை கட்டுப்படுத்த அரசாங்கம் தவறியதாக கவலை தெரிவித்தார். மேலும், நாய் கடித்து பெண்மனி உயிரிழந்த விவகாரம் குறித்து தாமஸ்வில்லில் உள்ள ஜிபிஐ புலனாய்வு  அமைப்பு தீவிரமாக விசாரித்து வருகின்றது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web