அதிர்ச்சி.. பேருந்துக்காக காத்திருந்த பெண்ணுக்கு சரமாரி வெட்டு.. இளைஞர் வெறிச்செயல்!

 
கோகுல்

சேலம் 4 ரோடு பஸ் ஸ்டாண்டில் நேற்று இரவு பஸ்சுக்காக பெண் ஒருவர் காத்திருந்தார். அப்போது, ​​அங்கு வந்த வாலிபர் ஒருவர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அந்த பெண்ணின் தலை மற்றும் கழுத்தில் சரமாரியாக வெட்டினார். இதில் பலத்த காயமடைந்த அந்த பெண் ரத்த வெள்ளத்தில் சரிந்தார்.  உடனடியாக அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அவர் எருமாபாளையம் பகுதியை சேர்ந்த எலக்ட்ரீசியன் கோகுல் (23) என்பது தெரியவந்தது. மேலும் அறிவழகனால் வெட்டப்பட்ட பெண் பள்ளப்பட்டியை சேர்ந்த பிரியா (29) என்பதும் தெரிய வந்தது.  இவருக்கும் விஜய் கணேஷ் என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்ற நிலையில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு விஜய் கணேஷ் இறந்து விட்டார்.

இதையடுத்து பிரியாணி  கடையில் வேலை செய்து கொண்டிருந்த போது கோகுலுக்கும் பிரியாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு கோகுலிடம் பேச பிரியா சம்மதித்துள்ளார். மேலும் பிரியாவை செல்போனில் தொடர்பு கொண்டும் எடுக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கோகுல், பிரியாவை அரிவாளால் வெட்டியது தெரியவந்தது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web