துயரம்... நாடாளுமன்றம் எதிரே தீக்குளித்த இளைஞர் உயிரிழப்பு!

 
உத்தரபிரதேச இளைஞர் தற்கொலை உத்தரபிரதேச இளைஞர் தற்கொலை

தலைநகர் டெல்லியின் மையப்பகுதியில் நாடாளுமன்றம் அமைந்துள்ளது. நாடாளுமன்றத்தை சுற்றி 24 மணி நேரமும் பாதுகாப்புப் பணியில் பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர். இதேவேளை, கடந்த 25ஆம் தேதி நாடாளுமன்றம் கட்டிடம் அருகே வந்த இளைஞர் ஒருவர் தன் மீது பெற்றோல் ஊற்றி தீக்குளித்துள்ளார்.

நாடாளுமன்ற தற்கொலை முயற்சி

இதனால் அதிர்ச்சியடைந்த பாதுகாப்பு படையினர் பலத்த தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இளைஞரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில், 95 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 3 மணியளவில் உயிரிழந்தார்.

குடிபோதையால் நிகழ்ந்த மரணம் !

தற்கொலை செய்து கொண்ட இளைஞருக்கு 26 வயது என்றும் அவர் உத்தரபிரதேசத்தில் உள்ள பஹ்பத் கிராமத்தை சேர்ந்தவர் என்றும் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. குடும்ப தகராறு காரணமாக அவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!