சோகம்... வெள்ளியங்கிரி மலையில் இளைஞர் பரிதாப மரணம்.. பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு!

 
வீரக்குமார்

கோவை, வெள்ளியங்கிரி மலை மீது ஏறி, சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களிடம் ஆர்வம் அதிகரித்து வரும் நிலையில், ஆபத்தான இந்த மலைப்பாதையில் ஏறிச் சென்று வழிபடும் பக்தர்கள் உயிரிழக்கும் நிலையும் அதிகரிக்கிறது. இளைஞர் ஒருவர் மலையிலேறி தரிசனம் முடித்து கீழறங்குகையில் தவறி விழுந்து உயிரிழந்த நிலையில், பலியானோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் முதல் வெள்ளியங்கிரி மலை ஏற பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் மானோர்  மலையில் ஏறி வெள்ளியங்கிரி சுவாமியை தரிசனம் செய்து வருகின்றனர்.  இந்நிலையில், திருப்பூர் மாவட்டம், எஸ்.பி.காலனியை சேர்ந்த வீரக்குமார் (வயது 31) கடந்த 18ம் தேதி தனது நண்பர்களுடன் வெள்ளியங்கிரி மலைக்கு வந்தார்.

பின்னர் நண்பர்களுடன் மலையில் ஏறி சாமி தரிசனம் செய்தார். பின்னர் அங்கிருந்து தனது நண்பர்களுடன் கீழே சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக வீரகுமார் 7வது மலையில் இருந்து கால் தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு வயிறு மற்றும் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதை பார்த்த அவரது நண்பர்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனே வனத்துறையினர் விரைந்து வந்து, மலைவாழ் மக்களுடன் இணைந்து வீரக்குமாரை மீட்டு மலையில் இருந்து டோலியில் மலையடிவாரத்துக்கு கொண்டு வந்தனர்.

 பூலுவப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி சிகிச்சைக்கு பின் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வீரக்குமார் இன்று அதிகாலை உயிரிழந்தார். இது குறித்து ஆலாந்தரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களில் வெள்ளியங்கிரி மலையில் பலியானோர் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது.

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web