அதிகாலையில் அதிர்ச்சி... விரைகிறார் ஸ்டாலின்.... முன்னாள் திமுக எம்.எல்.ஏ., திடீர் மரணம்!

திமுக முன்னாள் எம்.எல்.ஏ. வேணு, உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவரது மறைவு திமுக தொண்டர்களுக்கு பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்த நேரில் செல்வார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினராகவும் பதவி வகித்து வந்த கும்மிடிப்பூண்டி கி.வேணு இன்று அக்டோபர் 21 ம் தேதி அதிகாலை உடல் நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனளிக்கமால் காலமானார். இதையடுத்து அவரது சொந்த ஊரான கும்மிடிப்பூண்டியை அடுத்துள்ள பனபாக்கத்தில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த வைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக வேணு அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரது மறைவுக்கு திமுக நிர்வாகிகள் மற்றும் கட்சி உறுப்பினர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பிற அமைச்சர்களும், கட்சி பிரமுகர்களும் டோரும் நேரில் சென்று வேணுவின் உடலுக்கு அஞ்சலி செலுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திமுக தொண்டர்களால் கும்மிடிப்பூண்டியார் என்று அழைக்கப்பட்டார். கடந்த சில ஆண்டுகளாகவே, தனது உடல்நலக் குறைவு காரணமாக தீவிர அரசியலில் இருந்து வேணு, சற்று விலகி இருந்தது குறிப்பிடத்தக்கது. இவருக்கு கடந்த 2021ம் ஆண்டிற்கான 'கலைஞர் விருது' வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வேணுவின் மறைவிற்கு முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில், “எத்தகைய இடர் வரினும் எதிர்த்து நிற்கும் அஞ்சாத நெஞ்சுக்குச் சொந்தக்காரர் அவர். இந்திய வரலாற்றின் கருப்புப் பக்கமான மிசாவை நெஞ்சுரத்தோடு எதிர்கொண்டு சிறை ஏகிய போராளி அவர். மிசா சிறைவாசத்தில் என்னோடும், கருப்புக் கொடி போராட்டத்தில் ஈடுபட்டு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களோடும் சிறையில் வாடியவர் அவர். கும்மிடிப்பூண்டி என்றாலே வேணுதான் என்று சொல்லுமளவுக்கு, அந்தத் தொகுதி மக்களிடமும் ஒன்றுபட்ட திருவள்ளூர் மாவட்ட மக்களிடமும் அன்பு காட்டி நற்பெயர் பெற்ற அவரை இன்று இழந்து தவிக்கிறோம் என்று எண்ணுகையில் கண்களில் கண்ணீர் ததும்புகிறது” என்று கூறியுள்ளார்.
ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க!
ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!