அதிர்ச்சி... நாடு முழுவதும் ரயில் சேவை முடங்கும் அபாயம்.. 12 லட்சம் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட ஆலோசனை!

 
ரயில்வே ஊழியர்கள்

இந்திய ரயில்வே ஊழியர்கள் 12 லட்சம் பேர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் உள்ள 12 லட்சம் ரயில்வே ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் நாடு முழுவதும் ரயில்வே சேவை முடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று ரயில்வே ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வரும் நிலையில் இதனை வலியுறுத்தி நாடு முழுவதும் ரயில்வே ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தீக்கிரையாக்கப்படும் ரயில்கள்.. நாடு முழுவதும் 200 ரயில் சேவைகள் பாதிப்பு..

இந்நிலையில் வேலை நிறுத்தம் குறித்து ஆலோசனை செய்வதற்காக நவம்பர் 20 மற்றும் 21 ஆம் தேதிகளில் ரயில்வே ஊழியர்கள் மத்தியில் வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இந்த வாக்கெடுப்பில் போராட்டம் நடத்துவது உறுதி செய்யப்பட்டால் ரயில்வே ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்தியாவில் உள்ள 12 லட்சம் ரயில்வே ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்தால் ரயில் போக்குவரத்து முற்றிலும் முடங்கும் அபாயம் இருப்பதாக கூறப்படுகிறது.

ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: மத்திய அரசு அறிவிப்பு | Diwali Bonus  for Railway Employees: Central Government Notification - hindutamil.in

கடந்த 1974 ஆம் ஆண்டு ஒட்டுமொத்த ரயில்வே ஊழியர்கள் 20 நாட்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் 50 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ரயில்வே ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்வார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். அதற்குள் ரயில்வே ஊழியர்களிடம் ரயில்வே துறை அமைச்சகம் பேச்சுவார்த்தை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web