அதிர்ச்சியில் திருமா... விசிக ஆர்பாட்டத்துக்கு திடீர் அனுமதி மறுப்பு!

 
தேவர்குளம் தேர்தல் முடிவை நிறுத்தி வைக்க வேண்டும் – தொல்.திருமாவளவன்
இன்று மாலை 4 மணிக்கு சென்னையில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் இன்று மாலை தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. சாதிக்கட்சி என்கிற இமேஜ் ஆரம்ப காலங்களில் இருந்தாலும், திருமாவளவனை தமிழகத்தில் ஒரு தேர்ந்த தன்மானமுள்ள தலைவராகவே பலரும் ப் பார்த்து வருகின்றனர். அவருக்கான மரியாதையை கட்சிப் பாகுபாடு இல்லாமல் அனைத்து அரசியல் கட்சிகளுமே தர தவறியதில்லை. தன் கொள்கையில் இன்றளவிலும் உறுதியாய் நிற்கும் திருமாவும் ஆளுங்கட்சிக்கு எதிராக களமிறங்க துவங்கியிருப்பது பொதுமக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.

மரணம் கள்ளச்சாராயம்

தவறு செய்யும் போது கூட்டணிக் கட்சியாக இருந்தாலும் கேட்பது சரி தானே? இத்தனை வருடங்களாக ஏன் இதைச் செய்யவில்லை என்று குறை சொல்லாமல் இனியாவது பொறுப்பான கட்சித் தலைவராக இருக்க வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் ஆதரவு பெருகுகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷச்சாரயத்தால் இதுவரை 58 பேர் பலியாகியுள்ளனர். 100க்கும்  மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவத்துக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பலரும்  பாதிக்கப்பட்டோருக்கு நேரில் சென்று ஆறுதலையும் தெரிவித்து வருகின்றனர். 

டாஸ்மாக்

இந்நிலையில், கள்ளக்குறிச்சி நச்சு சாராய சாவுகளில் தொடர்புடைய அதிகார வர்க்கத்தினர் உட்பட அனைவரையும் கைது செய்ய வேண்டும்.  தமிழகத்தில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என  வலியுறுத்தி சென்னையில் இன்று ஜூன் 24ம் தேதி மாலை 4 மணிக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திருமாவளவன் அறிவித்திருந்த நிலையில், போலீசார் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுத்துள்ளனர். 

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!