அதிர்ச்சி: அடுத்தடுத்து தீப்பிடித்து எரிந்த 3 லாரிகள்... லட்சக்கணக்கான மதிப்பிலான பொருட்கள் கருகி நாசம்!

 
லாரி தீ விபத்து

நாமக்கல் மாவட்டம் நாமக்கல் - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரிகளில் 3 லாரிகள் திடீரென தீப்பிடித்து எரிந்து நாசமானது. இந்த தீ விபத்து, பெட்ரோல் பங்க் அருகிலேயே நிகழ்ந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் நேற்று நவம்பர் 13ம் தேதி நள்ளிரவு பெட்ரோல் பங்க் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று லாரிகள் திடீரென தீப்பிடித்து எரிந்து சாம்பலானது. இதில் லட்சக்கணக்கில் மதிப்பிலான பொருட்கள் எரிந்து கருகி நாசமானது. 

நாமக்கல்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் முதலைப்பட்டி புதூர் அருகே தனியார் டயர் நிறுவனம் உள்ளது. அதன் அருகிலேயே பெட்ரோல் பங்க் ஒன்றும் உள்ளது. இந்நிலையில், தீபாவளி அன்று விடுமுறை என்பதால், லாரி ஓட்டுநர்கள் சிலர் ஒரு டேங்கர் லாரி, இரண்டு சரக்கு லாரிகள் என மூன்று லாரிகள் பெட்ரோல் பங்க் அருகில் நிறுத்தி வைத்துவிட்டு சென்றனர்.

தீயை அணைக்கும் பணி

அவற்றில் ஒரு லாரியில் பல லட்சம் மதிப்பிலான காட்டன் துணிகள் இருந்தன. மற்ற இரு லாரிகளில் பொருட்கள் எதுவும் இல்லை. இந்நிலையில்  நேற்று, திங்கள்கிழமை நள்ளிரவு 1.30 மணியளவில் திடீரென மூன்று லாரிகளும் தீப்பிடித்து எரிய தொடங்கின. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர், நாமக்கல் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு பகுதியில் இருந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டனர். லாரிகள் பற்றி எரிந்ததற்கு மிக அருகில் பெட்ரோல் பங்க் அருகில் இருந்ததால், துரிதமாக செயல்பட்ட தீயணப்பு வீரர்கள் வேறு அசம்பாவிதம் ஏதும் ஏற்படும் முன்னர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் ஒரு லாரியில் இருந்த துணிகள் முற்றிலும் எரிந்து நாசமானதால், பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சேதமடைந்த பொருட்கள்

தகவல் அறிந்து வந்த நல்லிபாளையம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். பட்டாசு வெடித்ததில் தீப்பொறிகள் ஏதேனும் விழுந்து தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது மர்ம நபர்கள் யாரேனும் தீ வைத்தார்களா என்பது குறித்து காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web