அதிர்ச்சி... 15 வயசு சிறுமியிடம் வெறித்தனமாய் நடந்து கொண்ட 4 ஆண்கள்... இன்ஸ்டாகிராம் நட்பால் நேர்ந்த பரிதாபம்!

 
சிறுமி

மகாராஷ்டிர மாநிலத்தில், தானே மாவட்டத்தில் கல்யாண் நகர் பகுதியில் வசித்து வந்த 15 வயது பள்ளி மாணவி ஒருவர், சில நாட்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலமாக ஒருவருடன் பழகி உள்ளார். அறிமுகமான சில நாட்களிலேயே மாணவி, தன்னுடைய வீட்டின் முகவரியைப் பகிர்ந்துள்ளார். இந்நிலையில், மைனர் சிறுவன் ஒருவன் உட்பட நான்கு பேர், மாணவியை கூட்டு பலாத்காரம் செய்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பாலியல் துன்புறுத்தல்

கூட்டு பலாத்காரம் செய்த நான்கு பேரில், ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் மாணவிக்கு இன்ஸ்டாகிராம் மூலமாக அறிமுகமாகி இருக்கிறார். சாஹில் ராஜ்பர், சுஜல் கவ்லி, விஜய் பெரா மற்றும் ஒரு மைனர் சிறுவன் இந்த கூட்டு பலாத்காரத்தில் ஈடுபட்டதாக அடையாளம் காணப்பட்டு காவல் துறையினர் கைது செய்துள்ளனர். குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட மைனர் சிறுவன் சீர்திருத்த இல்லத்திற்கு அனுப்பப்பட்டுள்ளான்.

பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர், கோல்சேவாடி காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்த நிலையில், இந்த சம்பவம் வெளியே தெரிந்துள்ளது.  வழக்கமாக பள்ளி விட்டு வீட்டுக்கு வரும் தங்களது மகள் இன்னும் வரவில்லை என மாணவியின் குடும்பத்தினர் போலீசில் புகார் அளித்துள்ளனர். புகாரைப் பெற்றுக் கொண்ட போலீசார் மாணவியைத் தேடி வந்தனர்.

பாலியல் தொல்லை

போலீசாரின் விசாரணையில், இன்ஸ்டாகிராமில் பழகிய சில நாட்களிலேயே, மாணவியின் ஆண் நண்பன் சாஹில், பாதிக்கப்பட்ட மாணவியிடம், தனது தோழிக்கு சில தவறான புரிதல் இருப்பதாகவும், உல்லாஸ் நகரில் இருக்கும் அவள் வீட்டிற்கு வந்து பிரச்சனையைத் தீர்த்து வைக்குமாறும் அழைத்துள்ளான். இதை உண்மை என நம்பிய மாணவியும் குறிப்பிட்ட விலாசத்திர்கு சென்றிருக்கிறார். அங்கே சாஹில் மாணவியின் கற்பை சூறையாடி உள்ளான். 

ருசி கண்ட பூனையைப் போல சாஹில், பாதிக்கப்பட்ட மாணவியை மிரட்டி, மீண்டும் அழைத்து, அடுத்த நாளிலும் தனது மூன்று நண்பர்களுடன் சேர்ந்து மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. சிறுமி தனது வீட்டிற்கு திரும்பி வந்து கூட்டு பலாத்காரம் குறித்து தனது குடும்பத்தினரிடம் தெரிவித்துள்ளார். 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web