அதிர்ச்சி... 3 குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை!

 
ஸ்ரீஜா

அழகான பூந்தோட்டம் போல இருந்த குடும்பம். யார் கண் பட்டதோ... எல்லாமே பெண் எடுத்த தவறான முடிவினால் இன்று ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலைச் செய்து கொண்டது கேரள மாநிலம் கண்ணூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகளையும் விட்டு வைக்காமல், 3 குழந்தைகள் உட்பட 5 பேர் தற்கொலைச் செய்து கொண்டுள்ளனர்.

கேரளா மாநிலம் கண்ணூரைச் சேர்ந்தவர் ஸ்ரீஜா. இவருக்கு திருமணமாகி சூரஜ் (12), சுஜின் (10) என்று இரண்டு மகன்களும், சுரபி (8) என்கிற மகளும் உள்ளனர். இந்நிலையில், தனது கணவருடன்  கருத்து வேறுபாடு ஏற்பட்டு, கணவரைப் பிரிந்து குழந்தைகளுடன் ஸ்ரீஜா தனியாக வசித்து வந்தார்.

ஸ்ரீஜா

இந்நிலையில், கணவரைப் பிரிந்து தனியே வாழ்ந்து வந்த ஸ்ரீஜாவுக்கு ஷாஜி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் படுக்கையறையைப் பகிர்ந்து கொள்வது வரையில் நெருக்கமான நிலையில், இருவரும் கடந்த 16ம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.

ஷாஜியும் ஏற்கெனவே திருணமாகி மனைவி, 2 குழந்தைகளுடன் வாழ்ந்து வருபவர். தனது முதல் மனைவியை விவகாரத்து செய்யாமலேயே ஸ்ரீஜாவை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். ஸ்ரீஜாவைத் திருமணம் செய்து கொண்ட நாளில் இருந்தே இருவருக்கும் இடையே தொடர்ந்து பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில், இன்று காலை நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்பட்டாததால் அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் ஜன்னல் வழியாக எட்டி பார்த்த போது, ஸ்ரீஜாவும், ஷாஜியும், மூன்று குழந்தைகளும் என ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேரும் தற்கொலை செய்து கொண்டதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

மூன்று குழந்தைகளும் மாடிக்கு செல்லும் படிக்கட்டில் தூக்கிட்ட நிலையில் இறந்துள்ளனர். குழந்தைகளைக் கொலைச் செய்த பின்னர் தம்பதி இருவரும் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலைச் செய்து கொண்டுள்ளனர். 

ஸ்ரீஜா

இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் 5 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web