அதிர்ச்சி.. 11 வயது சிறுமியை கடத்தி 2 ஆண்டுகளாக பலாத்காரம் செய்த ஃபேஸ்புக் காதலன் கைது !

 
சிறுமி

நாடு முழுவதும் பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க கடுமையான சட்டங்கள் வந்தபோதும், குற்றங்கள் குறைந்தபாடில்லை. குறிப்பாக உத்தரப்பிரதேசத்தில் அவ்வப்போது நடக்கும் கொடூரமான சம்பவங்கள் நாடு முழுவதும் அதிர்வை ஏற்படுத்துகிறது.

அந்த வகையில், உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த 11 வயது சிறுமி கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் 24ஆம் தேதி முதல் காணாமல் போனார். குடும்பத்தினர் எங்கு தேடியும் சிறுமியை காணவில்லை என்பதால்,போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் கோரக்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து சிறுமியைத் தேடி வந்தனர். நீண்ட நாட்களாகியும் சிறுமி குறித்த தகவல் கிடைக்கவில்லை.

சிறுமி

இந்த நிலையில், சமீபத்தில் சிறுமியின் அறையை பெற்றோர் சுத்தம் செய்போது, இரண்டு செல்போன் எண்கள் கிடைத்தன. அவற்றில் ஒரு எண்ணை தொடர்புகொண்டு பேசியபோது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மறுமுனையில் பேசியவர், ஹைதராபாத்தைச் சேர்ந்த ஷேக் என்பவர் பேசுவதாகவும், தன்னுடன் அந்த சிறுமி இருப்பதாகவும் கூறியுள்ளார். அத்துடன் இனி அவள் வீடு திரும்பமாட்டாள் என்றும், அவளை மறந்து விடுமாறும் அவர் மிரட்டியுள்ளார்.

இதுதொடர்பாக போலீசாரிடம், சிறுமியின் பெற்றோர் தகவல் அளித்தனர். இதையடுத்து அந்த நபர் மீது வழக்குப் பதிவு செய்து செல்போன் எண் சிக்னலை வைத்து அவர் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்தனர். அவர் மகாராஷ்ரா மாநிலம் லத்தூரைச் சேர்ந்த மனுதின் பதுரே என்பதை கண்டுபிடித்தனர்.

சிறுமி

அங்கு சென்ற போலீசார் சிறுமியை பத்திரமாக மீட்டனர். 11 வயது சிறுமியை 2 ஆண்டுகளாக அடைத்துவைத்து பாலியல் பலாத்காரம் செய்த மனுதின் பதுரேவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். அவரிடம் விசாரித்த போது, கோரக்பூரில் வசித்த போது சிறுமியிடன் ஃபேஸ்புக் மூலம் பழக்கமானதாக அவர் கூறினார். ஃபேஸ்புக் மூலம் பழகிய 11 வயது சிறுமியை 2 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்தவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம

From around the web