சென்னையில் அதிர்ச்சி... நள்ளிரவு நட்சத்திர ஹோட்டல் பாரில் நடனமாடிய பெண்களுடன் தகராறு... தட்டிக் கேட்டவருக்கு கத்திக்குத்து!

 
சாலமன்

சமீபமாக தமிழகத்தில் வன்முறை அதிகரித்து வருவதாக சமூக ஆர்வலர்கள் பெரிதும் குற்றம் சாட்டி வருகின்றனர். ஒரு பக்கம் டாஸ்மாக் பார்களால் நடக்கின்ற விபத்துக்கள், கொலை, கொள்ளை, பாலியல் தொல்லைகள் அதிகரித்து வரும் நிலையில், இன்னொரு புறம் மேல்தட்டு மக்கள், உயரதிகாரிகளின் வாரிசுகள், திரை நட்சத்திரங்களின் வாரிசுகள் என உயர்தர பப்களில் குடித்து விட்டு, நடுரோட்டில் இவர்கள் செய்கிற அலப்பறைகளுக்கு அளவேயில்லாமல் போய் கொண்டிருக்கிறது.

சமீபமாக பெண்களும் குடித்து விட்டு, இரவு நேரங்களில் போலீசாரிடம் வாக்குவாதம் செய்கிற வீடியோக்கள் வலம் வருகின்றன. தொடர்ந்து அடுத்தடுத்து திமுக பிரமுகர்கள் மர்ம கும்பல்களினால் வெட்டிக் கொலைச் செய்யப்பட்ட சம்பவங்களும் நடந்தேறின. இந்நிலையில், சென்னையில் மது பாரில் நடனமாடிய பெண்களுடன் தகராறு செய்ததைத் தட்டிக் கேட்ட வாலிபர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

வாலிபரைக் கத்தியால் குத்தியவர் துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டுள்ளதால் அது குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை சூளைமேடு பகுதியைச் சேர்ந்தவர் ஹெக்டர் சாலமன்(28). இவரது உறவினர்களான கார்த்திக் குமார், துனுதீன் மற்றும் பெண் நண்பர்களுடன் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பார்க் எலான்சா ஓட்டலில் உள்ள பாரில் மது அருந்தியதாக தெரிகிறது.

காயமடைந்த ஹெக்டர்  சாலமன்

அப்போது அவர்களுடன் சென்றிருந்த இரண்டு பெண்கள் பாரில் நடனம் ஆடிக் கொண்டிருந்த போது அங்கிருந்த சிலர், நடனமாடிக் கொண்டிருந்த பெண்கள் மீது இடித்ததாக கூறப்படுகிறது. இதனால் இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது .

இதன் பின்னர் ஹெக்டர் சாலமன், பாரில் இருந்து வெளியே வந்த போது அவரிடம் தகராறில் ஈடுபட்ட குகன் என்பவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து சாலமனின் முதுகில் கத்தியால் குத்தி விட்டு தப்பிச் சென்றனர். இதனால் காயமடைந்த சாலமனை அவருடன் வந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

தாக்குதல் நடத்திய குகன் வாளோடு.

தகவல் அறிந்து நுங்கம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, அங்கிருந்த சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றி வந்து விசாரணை நடத்தி வந்தனர். பின்னர் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் இந்த மோதல் தொடர்பாக குகன் உள்பட 5 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!

ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!

From around the web