அடுத்த அதிர்ச்சி... கொரோனாவைத் தொடர்ந்து பரவி வரும் புதிய வைரஸ்.. ஒருவர் பலி!

 
வைரஸ்

இந்த உலகம் இதுவரை  இல்லாத வகையில் பெரும் அழிவையும், இழப்பையும், பல்வேறு வகையான பாதிப்புகளை எதிர்கொண்டது கொரோனா காலத்தில். தற்போது கொரோனா கட்டுக்குள் வந்தாலும் அதன் தாக்கம் இன்றுவரை முடிவுக்கு வரவில்லை. 

கொரோனா தாக்கம் எதிரொலியால் பல்வேறு வகையான நோய்கள், உடல்சார்ந்த பாதிப்புகளை மனித உலகம் எதிர்கொள்கிறது. மேலும் புதுவகையான வைரஸ்களும் பரவி அச்சுறுத்தி வருகின்றது. அந்த வகையில் சமீபத்தில் போவாசான் வைரஸ் (Powassan virus) என்று அழைக்கப்படும் கொடிய வைரஸ் தொற்று பரவி வருகிறது. இந்த வைரஸ் காரணமாக அமெரிக்காவில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

 வைரஸ்

இந்த ஆண்டு அமெரிக்காவின் மைனே மாகாணத்தில் போவாசான் தொற்றின் முதல் பாதிப்பு பதிவாகியுள்ளது. போவாசான் நோய்த்தொற்றுகள் மிகவும் அரிதானவை என்றாலும், சமீபத்திய ஆண்டுகளில் தொற்று குறிப்பாக அமெரிக்கா, கனடா மற்றும் ரஷ்யாவில் அதிகரித்துள்ளது. 2015 ஆம் ஆண்டிலிருந்து 15 போவாசான் பாதிப்புகள் பதிவான நிலையில், கடந்த ஆண்டு, மைனேயில் இரண்டு இறப்புகள் பதிவாகியுள்ளன. அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் 25 பேர் வரை நோய்த்தொற்றுக்கு ஆளாகிறார்கள்.  

இந்த வைரஸ் மான் உண்ணி அல்லது அணில் உண்ணி போன்ற பாதிக்கப்பட்ட உண்ணி கடித்தால் Powassan வைரஸ் பரவுகிறது. 

இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால் காய்ச்சல், தலைவலி, வாந்தி மற்றும் பலவீனம் போன்ற அறிகுறிகளை உணரமுடியும். மேலும் மூளை நோய்த்தொற்றை ஏற்படுத்தலாம் அல்லது மூளை மூளைக்காய்ச்சல், முதுகுத் தண்டு வலி உருவாக்கலாம். கடுமையான சந்தர்ப்பங்களில், நோயாளிகள் குழப்பம், ஒருங்கிணைப்பு இழப்பு, பேசுவதில் சிரமம் மற்றும் வலிப்பு நோய் கூட ஏற்படலாம் எனவும் மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

வைரஸ்

கொடிய வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் மருத்துவரை தொடர்பு கொள்ள வேண்டும், அவர்கள் நோயாளியின் அறிகுறிகள் மற்றும் அறிகுறிகளின் அடிப்படையில் இரத்தம் மற்றும் முதுகெலும்பு திரவத்தின் ஆய்வக சோதனைகள் மூலம் அவர்களின் நிலையை கண்டறிய முடியும் எனவும் தெரிவிக்கின்றனர். போவாசான் வைரஸ் நோய்த்தொற்றின் நிகழ்வுகளுக்கு சிகிச்சையளிப்பதற்கு குறிப்பிட்ட மருந்துகள் எதுவும் இல்லை என்றாலும், மருத்துவர்கள் அடிக்கடி OTC மருந்துகளை பரிந்துரைக்கின்றனர்.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web