கனடாவை அதிர வைத்த பகீர் சம்பவம்.. கோடிக்கணக்கில் தங்கம் கொள்ளை.. தலைமறைவாக இருந்த இந்தியர் கைது!

 
கனடா தங்கம் கொள்ளை

ஏப்ரல் 17, 2023 அன்று, சுவிட்சர்லாந்தின் சூரிச்சிலிருந்து ஒரு விமானம் கனடாவை அடைந்தது.ஒரு கொள்கலனில் 6,600 தங்கக் கட்டிகள் இருந்தன. மொத்தம் 180 கிலோ எடை கொண்ட இவற்றின் மதிப்பு இந்திய மதிப்பில் ரூ.167 கோடி. டொராண்டோவில் உள்ள பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியதும், விமான நிலையத்தின் தனி பகுதிக்கு கொள்கலன் கொண்டு செல்லப்பட்டது. அப்போது அந்த கொள்கலன் காணாமல் போனது. இது போலி ஆவணங்கள் மூலம் கடத்தப்பட்டது.

தங்க கட்டிகளும் கொள்ளையடிக்கப்பட்டன. கனடிய வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.சம்பவம் குறித்து அடுத்த நாள் போலீசில் புகார் செய்யப்பட்டது. விசாரணையில், ஏர் கனடாவின் முன்னாள் ஊழியர்களுக்கு இந்தக் கொள்ளையில் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்பட்டது.இந்த வழக்கில் தொடர்புடைய 4 பேர் கடந்த மாதம் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 2 பேர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

இந்த நிலையில் முக்கிய புள்ளியான ஆர்கிட் குரோவர் (வயது 36) என்பவரை போலீசார் தேடி வந்தனர். ஒரு வருடமாக தலைமறைவாக இருந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த குரோவர் கனடா காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த தகவல் நேற்று ஊடகங்களுக்கு தெரிவிக்கப்பட்டது. மேலும் 9 பேர் கைது செய்யப்பட்ட ஒரு மாதத்திற்கு பிறகு இந்த கைது நடந்துள்ளது. இது தவிர, 3.06 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பணம் திருட்டு வழக்கு தொடர்பாக குரோவருக்கு எதிராக கனடா முழுவதும் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

இதேபோல், ஆயுதம் தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் அவர் அமெரிக்காவில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார். இந்நிலையில், இந்தியாவில் இருந்து கனடா சென்றடைந்த அவரை, பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் அந்நாட்டு போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web