திடுக்கிடும் தகவல்கள்... கல்லூரி பேராசிரியை நிகிதா தலைமறைவாகி ஊர் ஊராக பதுங்கல்.!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அஜித்குமார் மீது நிகிதா நகை திருட்டு புகார் அளித்துள்ளார். பல பண மோசடி புகார்கள் நிலுவையில் உள்ளன. 2010ல் துணை முதல்வராக இருந்த ஸ்டாலினின் உதவியாளர் மூலம் அரசு வேலை வாங்கி தருவதாக பலரிடம் மோசடி செய்ததாக 2011-ல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், தன்னை மருத்துவர் என கூறி வந்த அவர், திண்டுக்கல்லில் உள்ள அரசு கல்லூரி ஒன்றில் பேராசிரியையாக பணிபுரிந்து வந்துள்ளார். 15 ஆண்டுகளுக்கு முன் பதியப்பட்ட மோசடி புகாரும் மீண்டும் தோண்டப்படும் நிலையில், திருமங்கலத்தில் உள்ள அவரது வீட்டை பூட்டிவிட்டு தாயாருடன் நிகிதா தலைமறைவாகிவிட்டார்.
தற்போது, கல்லூரிப் பேராசிரியராக பணிபுரிந்து வரும் நிகிதா தீவிர பாஜக ஆதரவாளராக செயல்பட்டு வந்தது அம்பலமாகியுள்ளது. அவரது ஃபேஸ்புக் உட்பட சமூகவலைதளங்களில் பாஜகவுக்கு ஆதரவாக தொடர்ந்து பதிவுகள் வெளியிட்டு வந்துள்ளார்.
குறிப்பாக, பாஜக அண்ணாமலையின் தீவிர ஆதரவாளராக, அவரைப் பாராட்டி பல்வேறு பதிவுகளை வெளியிட்டுள்ளார். அது சம்பந்தமான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி, திருமண மோசடி என இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்நிலையில், பாஜக பின்புலத்தை பயன்படுத்தி பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டு இருப்பதாக புகார்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், போலீசார் தன்னை கைது செய்து விடுவார்களோ என்ற அச்சத்தில் ஊர் ஊராக சுற்றி வருவதாக தெரிகிறது. தற்போது பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டீக்கடை ஒன்றில் நிகிதா தனது தாயார் மற்றும் கார் ஓட்டுநருடன் இருந்துள்ளார். இதை கண்ட ஒருவர் தனது செல்போன் மூலம் காட்சியை பதிவு செய்து போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். அது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!