அதிர்ச்சி.. இளைஞர்களின் வாழ்க்கையில் மீண்டும் விளையாடுகிறது ‘பப்ஜி’... நாளை முதல் விளையாடலாம்..!

 
பப்ஜி

ஏற்கெனவே இந்திய இளைஞர்களில் பலர் செல்போனும் கையுமாக தான் இருக்கிறார்கள். பல மாணவிகள் வாழ்க்கையில் தடம் மாறி செல்லவும் செல்போனும், சமூக வலைத்தளங்களும் காரணங்களாக விவாதிக்கப்பட்டு வருகிறது. பப்ஜி விளையாட்டால் பலர் தற்கொலை செய்து கொண்டதும், தற்கொலைக்கு முயன்றதும், மனம் பிறழ்ந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிகழ்வுகளும் அரங்கேறின. இந்தியாவில் பப்ஜி விளையாட்டு தடைச்செய்யப்பட்ட நிலையில், இப்போது அதிர்ச்சியளிக்கும் செய்தியாக நாளை முதல் இந்தியாவில் பப்ஜி விளையாட்டை பயனர்கள் விளையாட தொடங்கலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தென் கொரியாவின் கிராப்டன் நிறுவனத்துக்கு சொந்தமானது பப்ஜி. இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட குறுகிய காலத்திலேயே இளைஞர்கள் பப்ஜி விளையாட்டைக் கொண்டாட ஆரம்பித்தனர். இந்தியாவில் இ-ஸ்போர்ட்ஸ் துறை வளர்ச்சியில் பப்ஜிக்கு முக்கிய பங்கு உண்டு.

PUBG

எனினும், இந்தியா - சீனா இடையேயான எல்லை பிரச்சினை வலுவடைந்த போது பல்வேறு சீன செயலிகளுக்கு மத்திய அரசு தடை விதித்த நிலையில், பப்ஜி விளையாட்டுக்கும் தடை விதித்தது.

அதன் பின்னர், இந்திய அரசுடன் கிராப்டன் நிறுவனம் ஆலோசனை செய்து, பப்ஜி விளையாட்டை பிஜிஎம்ஐ என்ற பெயரில் மீண்டும் வேறு வடிவில் அறிமுகப்படுத்தியது. இந்நிலையில், நாளை மே 29 முதல் இந்தியர்கள் இந்த விளையாட்டை விளையாடலாம் என்று தெரிவித்துள்ளது.

இந்த பிஜிஎம்ஐ விளையாட்டிற்கு இந்திய அரசாங்கம் 3 மாத காலம் கெடு விதித்துள்ளது. இந்த மூன்று மாதங்கள் அந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் இந்திய அரசங்கத்தால் நேரடியாக கண்காணிக்கப்படும். அதன் பிறகு அதை தொடர்ந்து அனுமதிக்கலாமா? என்ற முடிவை அரசாங்கம் எடுக்கும்.

Pubg

Ios பயனர்கள் இப்போதே Preload செய்யலாம். இந்த கேம் மே 29 முதல் வெளியானதும் விளையாட தொடங்கலாம். இந்த மாதம் தொடக்கத்தில் விரைவில் BGMI இந்தியாவில் வெளியாகும் என்று அறிவிப்பு வெளியானது. ஆனால் இந்த கேம் இம்மாதமே வெளியாகும் என்பதால் அதன் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web