அதிர்ச்சி தரும் ஆய்வறிக்கை... 2 மாதங்களில் 479 விவசாயிகள் தற்கொலை!

மகாராஷ்டிரா மாநிலத்தில் பயிர்கள் சேதம், கடன்களை அடைக்க முடியாத சூழ்நிலை உட்பட பல்வேறு காரணங்களால் தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
அதே நேரத்தில் தற்கொலை செய்து கொள்ளும் விவசாயி குடும்பத்தினருக்கு தலா ரூ. 1 லட்சம் நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிவாரணம் குறித்து மாநில சட்டசபையில் உறுப்பினர் கேள்வி எழுப்பி இருந்தார். இந்த கேள்விக்கு மகாராஷ்டிரா நிவாரணம், மறுவாழ்வுத்துறை அமைச்சர் மார்க்ரண்ட் பாட்டீல் எழுத்துப்பூர்வ பதில் அளித்துள்ளார்.அதில் மகாராஷ்டிராவில் மார்ச், ஏப்ரல் ஆகிய 2 மாதங்களில் 479 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
அதில், 164 பேர் நிவாரணத்தொகை பெற தகுதி உள்ளவர்கள். மேலும் 153 பேர் நிவாரணத்தொகைக்கு தகுதி ஆனவர்களா என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. எஞ்சியோர் நிவாரணம் பெற தகுதி இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நிவாரணத்தொகையை அதிகரிக்க எந்தவித திட்டமும் தற்போது இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!