அதிர்ச்சி வீடியோ!! பைக் சாகசத்தால் பிரபல யூடியூபர் உயிரிழப்பு!!

 
அகஸ்தியா


இன்றைய இளைஞர்கள் சமூக வலைதளங்களில் லைக்குகளை அள்ளவும்,வைரலாக்கவும் விபரீத விளையாட்டுக்களில் ஈடுபடுகின்றனர். கட்டுக்கடங்காத வேகத்தில் பைக்கில் சாகசம், பைக் ஓட்டிக்கொண்டே  வீடியோ எடுத்தல்  இன்னும் பல வித்தைகளை செய்கின்றனர். பொழுதுபோக்காக இதை செய்தது எல்லாம் கடந்து தற்போது வியாபார நோக்கத்தில் இதனை செய்ய துணிந்துள்ளனர். இதனால் பல நேரங்களில் ஆபத்துக்கள் ஏற்பட்டு விடுகின்றன.  பிரபல யூடியூபரான அகஸ்திய சௌஹான் பைக் ரைடிங்குகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு லைக்குகளை அள்ளியும், வைரலாக்கியும் வந்தார்.


இவரது ஏராளமான வீடியோக்களுக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். எனவே, பைக்கில் சாகசங்கள் செய்து அதற்கான வீடியோக்களை தன்னுடைய யூடியூப் சேனல்களில் அவர் பதிவிட்டு வந்துள்ளார்.  அதே போல் ஒரு ரைடுக்காக  சமீபத்தில் யமுனா விரைவுச்சாலையின் 47 கிலோமீட்டர் மைல்கல்லில் 300 வேகத்தில் செல்ல முயற்சி செய்தார்.  அப்போது யமுனா எக்ஸ்பிரஸ்வேயில் மணிக்கு 300 கிலோமீட்டர் வேகத்தில் தனது பந்தய பைக்கை ஓட்டிச் சென்றபோது சாலை விபத்தில் உயிரிழந்தார்.டிவைடரில் மோதி அவரது ஹெல்மெட் உடைந்து அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.


இந்த கோர விபத்தில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அலிகார் மாவட்டத்தில் ஏற்பட்ட விபத்து குறித்து தகவல் அறிந்ததும் உடனடியாக காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவருடைய  உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.  அவர் பைக்கை ஒட்டி செல்லும் வீடியோ அவருடைய ஹெல்மெட்டில் இருந்த கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த  வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது. அதே நேரத்தில் இதே போல் ஆபத்தான ஸ்டண்ட்களை நிகழ்த்தியதற்காக அகஸ்தியா மீது  பல பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web