அதிர்ச்சி வீடியோ.. நூலிழையில் உயிர் தப்பிய அமித்ஷா... மின்கம்பி பிரச்சார வாகனத்தில் உரசி தீப்பொறி.. !!
ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடத்தப்பட்டு வருகிறது. இங்கு அசோக் கெலாட் முதல்வராக இருந்து வருகிறார். சட்டசபையின் 5 ஆண்டு பதவிக்காலம் விரைவில் முடிவுக்கு வர உள்ளதால் அங்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் நவம்பர் 25ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. ராஜஸ்தானை பொறுத்தமட்டில் மொத்தம் 200 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு தனித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் எனில் ஒரே கட்சி 101 இடங்களில் வெற்றி பெற வேண்டும். இங்கு காங்கிரஸ்-பாஜக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
अमित शाह जी की सुरक्षा में भरी चूक हो सकता था बड़ा हादसा
— Ashok (@Ashoksa20094402) November 8, 2023
कांग्रेस ने राजस्थान मे कितना विकास करवाया है उसकी जानकारी इस वीडियो से मिल जाएगी
कल परबतसर में अमित शाह जी का रथ बिजली के तार से टकरा गया जिसके कारण स्पार्किंग हुई तार टूट के सड़क पर गिर गया #AmitShah #BJP pic.twitter.com/hU5H8GrBrH
இந்நிலையில் தான் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று முன்தினம் ராஜஸ்தானில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பாஜகவின் தேர்தல் பிரச்சாரத்தில் நின்றபடி ஊர்வலம் சென்றார். குச்சமன், மக்ரானா, நாகவுர் பகுதிகளில் அமித் ஷா பிரச்சாரம் செய்தார். பாஜகவினர் ரதம் என கூறும் தேர்தல் பிரச்சார வாகனத்தில் நின்றபடி அமித் ஷா ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டார். அமித் ஷாவின் பிரச்சார வாகனம் பிடியாத் கிராமத்தில் இருந்து பர்பத்சர் எனும் பகுதிக்கு சென்று கொண்டிருந்த நிலையில் எதிர்பாராத விதமாக திடீரென்று பிரச்சார வாகனத்தின் மேல்பகுதியில் சென்ற மின்வயரில் உரசியது.
இதனால் தீப்பொறி எழுந்து மின்கம்பி அறுந்து விழுந்தது. இதனையடுத்து அமித்ஷா உட்பட அந்த வாகனத்தில் இருந்த அனைவரும் வேகமாக கீழே இறங்கினர். அமித் ஷா உள்பட அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதையடுத்து அமித் ஷா வேறு பிரச்சார வாகனத்தில் ஏறி ஓட்டு சேகரிப்பை தொடர்ந்து மேற்கொண்டார். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் இந்த திடீர் சம்பவம் குறித்து மண்டல ஆணையர் மூலம் உள்துறை அமைச்சகமும் விசாரணையை தொடங்கி உள்ளது. அதே நேரத்தில் இந்த விவகாரம் தொடர்பாக மாநில அரசும் விசாரணையைத் தொடங்கியுள்ளதாக முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.
ஐப்பசி மாத புனித நீராடலின் மகத்துவம்.. மிஸ் பண்ணீடாதீங்க!!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
கிடுகிடுவென உடல் எடை குறைய தினம் இந்த பழம் சாப்பிட்டு பாருங்க...!!
ஐஸ்வர்யங்களை அள்ளித் தரும் ஐப்பசி மாத பண்டிகைகள், சிறப்புக்கள்!!