அதிர்ச்சி வீடியோ... ராட்டினம் உடைந்து விழுந்து 23 பேர் படுகாயம்!

 
ராட்டினம்

சவுதி அரேபியாவில் பொழுதுபோக்கு பூங்காவில் ராட்டினம் ஒன்று உடைந்து விழுந்தது. இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த  வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

சமூக வலைத்தளங்களில் வெளியாகி இருக்கும் அந்த வீடியோவில், ராட்டினத்தில் மக்கள் உட்கார்ந்திருந்தனர். அந்த ராட்டினம் இயங்கும் போது திடீரென அதன் ஒரு பகுதி உடைந்தது. ராட்டினம் தரையில் விழுந்ததால் மக்கள் அலறி கூச்சல் போட்டனர்.

ராட்டினம்

இந்த விபத்தில் 23 பேர் படுகாயமடைந்தனர். உடனடியாக அங்கிருந்த  பொதுமக்கள், ராட்டினத்தில் இருந்து கீழே விழுந்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!

நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!

உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது?