அதிர்ச்சி வீடியோ... பேருந்து பாலியல் தொல்லை... நடத்துநரை செருப்பால் அடித்த பள்ளி மாணவி!

 
அதிர்ச்சி வீடியோ... பேருந்து பாலியல் தொல்லை... நடத்துநரை செருப்பால் அடித்த பள்ளி மாணவி!

நாடு முழுவதுமே பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்கள் சமீப காலங்களாய் அதிகரித்து வருகிறது. பொது இடங்களில் பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியல் அத்துமீறல் சம்பவங்கள் கவலையை ஏற்படுத்தும் நிலையில், ஓடும் பேருந்தில் பள்ளி மாணவிக்கு ஒருவருக்கு பேருந்தின் நடத்துநர் பாலியல் தொல்லைத் தந்துள்ளார்.

கொஞ்சமும் யோசிக்காத அந்த பள்ளி மாணவி, துணிச்சலாக பேருந்து நடத்துநரை தனது செருப்பால் அடிப்பதும், ஈவ் டீசிங் செய்து பாலியல் ரீதியாக அத்துமீறியதற்காகவும், தன்னிடம் தவறாக நடந்து கொண்டதற்காகவும் அவரை கடுமையாக அனைவர் முன்னிலையிலும் அறைந்துள்ளார்.



இது குறித்த வீடியோ ட்விட்டரில் பகிரப்பட்ட நிலையில், வைரலாக பரவி வருகிறது. பலரும் மாணவியின் துணிச்சல் செயலைப் பாராட்டி வருகின்றனர். 

அந்த வீடியோவில் பள்ளி மாணவி, பேருந்து நடத்துநரை தைரியமாக அறைவதையும், அவனது தகாத நடத்தைக்காக நடத்துநரை தன்னுடைய செருப்பால் அடிப்பதும் பதிவாகி இருக்கிறது. இந்த சம்பவம் மகாராஷ்டிரா மாநிலம், ரத்னகிரி மாவட்டத்தில் நடந்ததாக கூறப்படுகிறது. 

அங்கு மாணவி தனது தோழியுடன் சேர்ந்து பேருந்தில் பயணித்த நிலையில், நடத்துனரின் பாலியல் தொல்லைக்கும் அநாகரிகமான முறையான தொடுதலுக்கும் ஆளாகி இருக்கிறார். இந்நிலையில், நடத்துநரின் தவறான நடத்தைக்கு கடுமையாக பதிலளித்தார். 

அதிர்ச்சி வீடியோ... பேருந்து பாலியல் தொல்லை... நடத்துநரை செருப்பால் அடித்த பள்ளி மாணவி!

இது போன்ற செயல்களை பொறுத்துக்கொள்ள முடியாது என்பதை தெளிவுபடுத்தி தைரியமாக பள்ளி மாணவி நடத்துநருக்கு எதிராக ஆவேசமடைகிறார். இந்த வைரலான வீடியோவுக்கு பொதுமக்களிடம் இருந்து ஏராளமான ஆதரவான கருத்துகள் வந்து விழுகின்றன.

ஈவ் டீசிங்கை சமூகம் பார்க்கும் விதம் கணிசமாக மாறிவிட்டது இந்நிகழ்வின் சாட்சி. சிறுமிகளும் பெண்களும் பெருகிய முறையில் தமக்காக நிற்கிறார்கள், துன்புறுத்தலை அமைதியாக ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள்.

அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!

செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!