அதிர்ச்சி வீடியோ.. இரை என நினைத்து மருந்து பாட்டிலை விழுங்கிய நாகப்பாம்பு.. வலியால் துடித்த பரிதாபம்!

 
நாகப்பாம்பு

சமூக வலைதளங்களில் நாள்தோறும் பலவகையான வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக விலங்குகள் தொடர்பான வீடியோக்கள் பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது. அந்த வகையில், ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் இருமல் மருந்து பாட்டிலை விழுங்கிய நாகப்பாம்பு ஒன்று மீட்கப்பட்டது.


ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் இருமல் மருந்து பாட்டிலை நாகப்பாம்பு விழுங்கியுள்ளது. பின்னர் அந்த பாட்டில் அதன் தொண்டையில் சிக்கி பாம்பு சிரமப்பட்டது. இதையடுத்து, பாம்பு உதவி மையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அதன் பொதுச் செயலாளர் சுபேந்து மல்லிக் சம்பவ இடத்துக்கு விரைந்தார். பின்னர், தன் கொக்கியின் நுனியால் நாகப்பாம்பின் கீழ் தாடையை மெதுவாக விரித்து பாட்டிலை வெளியே எடுத்தார்.

பின்னர் பாம்பை பிடித்து ஊருக்கு வெளியே உள்ள காட்டுப்பகுதிக்கு கொண்டு சென்றார்.கவனக்குறைவாக வீசப்பட்ட மருந்து பாட்டிலை பாம்பு தனது இரையாக எடுத்து சாப்பிட ஆரம்பித்திருக்கலாம் என்றும், இதனால் தொண்டையில் சிக்கி பாதித்திருக்கலாம் என்று சுபேந்து மல்லிக் கூறினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web