வைரலாகும் அதிர்ச்சி வீடியோ... ஓடும் ரயிலில் ஏறிய போது நிலைதடுமாறி ரயிலுக்கும் தண்டவாளத்துக்கும் இடையில் சிக்கிய பெண்... RPF வீரரின் துணிச்சலான செயல்!

நாக்பூர் ரயில் நிலையத்தில் அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. இச்சம்பவத்தில், ஓடும் ரயிலில் ஏற முயற்சித்த பெண் ஒருவர், திடீரென சமநிலையை இழந்து நடைமேடைக்கும் ரயிலுக்கும் இடைப்பட்ட இடைவெளியில் விழ இருந்த சமயத்தில் மிகச் சரியாக அருகில் பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) வீரர் தீரஜ் தலால் துரிதமாக ஓடி வந்து, அந்தப் பெண்ணை பிடித்து இழுத்து அவரது உயிரைக் காப்பாற்றினார். இந்த சம்பவம் RPF அதிகாரப்பூர்வ பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
A woman slipped while boarding a train at Nagpur station and was left hanging from the door.
— RPF INDIA (@RPF_INDIA) June 29, 2025
Constable Dheeraj Dalal acted swiftly, pulling her to safety and preventing a major mishap.#OperationJeewanRaksha #HeroesInUniform#QuickAction @RPFCR @RailMinIndia pic.twitter.com/mHvYHGF94c
ஜூன் 30ம் தேதி நாக்பூர் – புனே எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு சென்ற போது இச்சம்பவம் நடந்ததாகத் தெரிகிறது. ரயில் நிலையத்தின் 4 ம் பிளாட்பாரத்தில் ஓடி வந்த அந்தப் பெண், ரயிலில் ஏற முயற்சித்த போது அவரது கால்கள் வழுக்கி கீழே விழுந்தார். ரயில் தொடர்ந்து நகர்ந்து கொண்டிருந்த நிலையில் வீரர் தீரஜ் தலால் துணிச்சலாக செயல்பட்டு அவர் விழுவதற்கு முன் காப்பாற்றியதால், ஒரு பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.
இந்நிகழ்வு ‘ஆபரேஷன் ஜீவன் ரக்ஷா’ திட்டத்தின் கீழ் நடைபெற்றது. சமூக வலைதளங்களில் இது வைரலாகி, RPF வீரரின் செயல் பெரிதும் பாராட்டப்பட்டு உள்ளது. இது குறித்து ரயில்வே அதிகாரிகள் ஓடும் ரயிலில் ஏறுவதை தவிர்க்க வேண்டும்” என தெரிவித்துள்ளனர்
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!