அதிர்ச்சி வீடியோ... ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிய 'பிரேமலு’ நடிகை!

 
மமிதா பைஜூ

’பிரேமலு’ புகழ் நடிகை மமிதா பைஜூ ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கி தவித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

மலையாளத்தில் வெளியான ‘பிரேமலு’ படம் மூலம்  அறிமுகமாகி, மலையாளம் மட்டுமல்லாமல் தமிழில் ஜிவி பிரகாஷூடன் ‘ரெபல்’ படத்திலும் நடித்திருந்த மமிதா பைஜூ ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தார். 

சூர்யா - பாலா கூட்டணியில் ‘வணங்கான்’ படத்திலும் மமிதா பைஜூ நடிப்பதாக இருந்தது. அதிகம் டேக் வாங்கியதால் பாலா தன்னை அடித்ததாக சொல்லி பரபரப்பை ஏற்படுத்தினார். பின்பு, தான் அப்படி சொல்லவில்லை என்றும் ரசிகர்கள் தவறாக புரிந்து கொண்டு விட்டார்கள் என்றும் விளக்கம் கொடுத்தார். 


 

இந்நிலையில் கடை திறப்பு விழா ஒன்றில் கலந்து கொண்ட நடிகை மமிதா பைஜூவைப் பார்க்க ஏராளமான ரசிகர்கள் திரண்டதால் கூட்ட நெரிசலில் சிக்கித் தவித்திருக்கிறார். ரசிகர்கள் கூட்டத்தில் இருந்து அவர் வெளியே வர சிரமப்படும் வீடியோ வெளியாகி இருக்கிறது. 

அதில், ரசிகர்கள் அவருடன் செல்ஃபி எடுக்கவும் பரிசுப் பொருட்கள் கொடுக்கவும் முண்டியடித்து வருகின்றனர். போலீஸ் பாதுகாப்போடு இரு பெண்கள் மமிதாவை பத்திரமாக அந்த இடத்தில் இருந்து அழைத்து சென்றிருக்கின்றனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web