அதிர்ச்சி வீடியோ... சரிந்து விழுந்த 6 மாடி குடியிருப்பு... 7 பேர் சடலமாக மீட்பு!

 
சூரத் கட்டிட இடிபாடு ஜேசிபி கட்டிடம்

சூரத்தில் 6 மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்து பெரும் விபத்து நிகழ்ந்ததில், 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

சூரத்தில் நேற்று ஆறு மாடிக் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்து விபத்துக்குள்ளான நிலையில், மீட்பு பணிகள் துரிதமாக நடைப்பெற்று ஒரு நாளுக்குப் பிறகு கட்டிட இடிபாடுகளில் இருந்து உடல்கள் வெளியே எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் இன்று காலை தெரிவித்தனர்.


சூரத், சச்சின் பாலி கிராமத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையில் 30 அடுக்குமாடி குடியிருப்புகளைக் கொண்ட 6 மாடிக் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது. உடனடியாக மீட்பு பணிகள் துவங்கிய நிலையில், நேற்று இரவு முழுவதும் கட்டிட இடிபாடுகளை அகற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், இன்று அதிகாலை 7 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தலைமை தீயணைப்பு அதிகாரி பசந்த் பரீக் தெரிவித்துள்ளார். 

தேடுதல் பணி தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இடிபாடுகளுக்குள் மேலும் குடியிருப்பாளர்கள் சிக்கவில்லை என மீட்புக்குழுவினர் நம்புகின்றனர். நேற்று மீட்பு பணிகளின் போது கட்டிட இடிபாடுகளுக்கு அடியில் இருந்து ஒரு பெண் மீட்கப்பட்டார். அந்த இடத்தில் கட்டிட குவியல்கள் மலை போல் உருவான பெரிய கான்கிரீட் அடுக்குகளாக் காட்சியளித்தது. மீட்புக் குழுவினர் இரவு முழுவதும் பணியாற்றி, கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருந்த குடியிருப்பாளர்களை மீட்டனர். 

சூரத் கட்டிட இடிபாடு

2017ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த கட்டிடம் இடிந்து விழும் போது அதில் 5 குடும்பங்கள் வசித்து வந்தனர். போலீசாரின் கூற்றுப்படி, கட்டிடம் சரிந்து விழுந்த போது பல குடும்ப உறுப்பினர்கள் வெளியே இருந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். ஆனால் இரவு ஷிப்டுகளில் பணிபுரிந்த பலர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்துள்ளனர்.

நேற்று கட்டிடம் திடீரென இடிந்து விழுந்ததைத் தொடர்ந்து குழப்பம் ஏற்பட்டதாகவும், இடிபாடுகளுக்கு அடியில் இருந்து தங்களால் முடிந்தவரை காப்பாற்ற விரைந்ததாகவும் உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர். கட்டிடம் கட்டி 8 ஆண்டுகள் மட்டுமே ஆன நிலையில், பெரும்பாலான குடியிருப்புகள் காலியாகவும், பாழடைந்தும் காணப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web