அதிர்ச்சி வீடியோ.. சிறுவனை சுத்துப்போட்ட தெரு நாய்கள்.. பீதியில் அலறிய சோகம்!

 
ஐதராபாத் சிறுவன்

சமீபகாலமாக தெருநாய்களால் அதிகம் தாக்கப்படும் செய்திகள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல் ஐதராபாத்தில் உள்ள சங்கரெட்டியில் உள்ள ஸ்ரீநகர் காலனியில் சிறுவனை 6 தெருநாய்கள் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான காட்சிகள் அருகில் உள்ள வீட்டின் கேமராவில் பதிவாகியுள்ளது. இப்போது இந்த வீடியோ  இணையத்தில் வைரலாகி வருகிறது.


அந்த வீடியோவில், “6 தெருநாய்கள் சிறுவனை சுற்றி வளைத்து தாக்குகின்றன, நீண்ட நேரத்துக்கு பிறகு, வீட்டில் இருந்து வெளியே வந்த நபரை பார்த்ததும், நாய்கள் தாக்குதலை நிறுத்திவிட்டு ஓடுகின்றன”. இந்த வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. காயமடைந்த சிறுவன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தெலுங்கானா மாநிலத்தில் சிறு குழந்தைகளை தெருநாய்கள் தாக்கும் சம்பவத்திற்கு தெலுங்கானா உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

மேலும், தெருநாய்கள் தொல்லையால் குழந்தைகள் உயிரிழப்பது குறித்து கவலை தெரிவித்த நீதிமன்றம், தெருநாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தவும், தாக்குதல்களை தடுக்கவும் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஒரு வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய நகராட்சி, வருவாய்த்துறை மற்றும் கால்நடைத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. 

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web