அதிர்ச்சி வீடியோ.. நிமிஷத்துல பறிபோன உயிர்... சுவர் இடிந்து விழுந்து விபரீதம்!
பஞ்சாப் மாநிலம் மான்சா மாவட்டத்தில் ஜவஹர்கே கிராமத்தில் வசித்து வருபவர் ஜக்ஜீவன். விவசாயம் செய்து வரும் இவரின் வயது 60 . இவர் சாலையில் தனது சைக்கிளில் சென்றுக்கொண்டிருந்தபோது, தெருவோரத்தில் இருந்த ஒரு சுவர் திடீரென இடிந்து அவர் மீது விழுந்தது. அந்தச் சுவர் அவர் மீது நேரடியாக விழுந்ததால் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சற்றும் எதிர்பாராத வகையில் திடீரென சுவர் விழுந்ததால், அவர் தப்பிச் செல்லும் வாய்ப்பே கிடைக்கவில்லை எனத் தெரிகிறது.
A 60-year-old farmer, Jagjeevan, lost his life in Jawarke village, Mansa, after a wall collapsed due to continuous rainfall. The victim was trapped under the debris and died on the spot.#PunjabFloods2025 pic.twitter.com/9ilMNvoCym
— Akashdeep Thind (@thind_akashdeep) August 31, 2025
அந்த பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால், சுவர் இடிந்து விழுந்திருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது குறித்து சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சோகமான சம்பவம் குறித்த வீடியோவை சமூக வலைதள பயனர் @thind_akashdeep தன்னுடைய கணக்கில் பதிவிட்டுள்ளார்.

அதில், “மான்சாவின் ஜவஹர்கே கிராமத்தில் தொடர் மழை காரணமாக சுவர் இடிந்து விழுந்ததில், 60 வயது விவசாயி ஜக்ஜீவன் உயிரிழந்தார். பாதிக்கப்பட்டவர் இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்” என பதிவிட்டுள்ளார். இச்சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுமக்கள், பழைய மற்றும் பாதுகாப்பற்ற கட்டிடங்களை பரிசோதிக்கும்படி அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!
