அதிர்ச்சி... ஃப்ரிட்ஜில் 6 துண்டுகளாக பெண்ணின் உடல்.. அதிர வைத்த வாக்குமூலம்!

 
அனுராதா

கொடுத்த கடனைக் கேட்டு தொடர்ந்து தொல்லைப்படுத்தி வந்ததால், தனது வீட்டின் கீழே தங்கியிருந்த அனுராதா எனும் பெண்ணைக் கொலைச் செய்து, கல் வெட்டும் இயந்திரத்தால் 6 துண்டுகளாக வெட்டி, ஃப்ரிட்ஜில் மறைந்து வைத்த சம்பவம் ஹைதராபாத்தை குலை நடுங்க செய்துள்ளது. இப்படியான சம்பவங்கள் தற்போது அதிகரித்து வருகிறது. டெல்லியில் காதலியின் உடலைக் கொன்று வெட்டி வீசியது என தற்போது கொலைச் செய்து ஃப்ரிட்ஜில் மறைத்து வைப்பதும், துண்டு துண்டாக வெட்டி வீசுவதும் அதிகரித்து வருகிரது.

ஹைதராபாத் மாநிலத்தில் மே 24ல் நடுத்தர வயதுப் பெண்ணின் துண்டிக்கப்பட்ட தலை மட்டும்  குப்பைக் கிடங்கில் கண்டுபிடிக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. அதில் துண்டிக்கப்பட்ட தலை  55 வயதான அனுராதா என அடையாளம் காணப்பட்டது.  அவர் தனது வீட்டு உரிமையாளரான 48 வயதான பி சந்திர மோகனால் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அனுராதாவுக்கும் சந்திர மோகனுக்கும் இடையே ஏற்பட்ட பணத்தகராறு காரணமாக  இந்த கொலை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்து சந்திரமோகன் மேல் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். அவரின் வாக்குமூலத்தில் பல திடுக்கிடும் சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. அதன்படி சந்திர மோகன், மே 12ல்  அனுராதாவை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். அதன் பிறகு  கல் வெட்டும் இயந்திரங்களைப் பயன்படுத்தி அவரது உடலை 6 பகுதிகளாக வெட்டி, அவற்றை ஒவ்வொன்றாக அப்புறப்படுத்த திட்டமிட்டார். அதுவரை துர்நாற்றம் எதுவும் வீசாமல் இருக்க  உடல் பாகங்களை குளிர்சாதன பெட்டியில் வைத்து, பாதுகாத்து வந்தார்.  மேலும் நாற்றம் வராமல் இருக்க ரூம் ஃப்ரெஷ்னரை பயன்படுத்தியுள்ளார். 

அனுராதா
அனுராதாவின் தலையை ஒரு கருப்பு பாலித்தீன் கவரில் வைத்து, முசி ஆற்றுக்கு அருகிலுள்ள அப்சல் நகர் சமூகக் கூடத்தின் குறுக்கே உள்ள குப்பைக் கிடங்கில் வீசியதையும் ஒப்புக் கொண்டார். மே 17ல் துப்புரவு பணியாளர் அதை கண்டுபிடித்தார்.இந்தக் கொலையை பொறுத்தவரை இந்தியாவை  அதிர வைத்த ஷ்ரத்தா வாக்கரின் கொலையை போன்றே சில திடுக்கிடும் ஒற்றுமைகள் உள்ளன.  உடல் உறுப்புகளைச் சேமிக்க குளிர்சாதனப் பெட்டியில் வைத்தது.  அழுகும் துர்நாற்றத்தை  மறைக்க வாசனை திரவியங்கள் மற்றும் தூபக் குச்சிகளைப் பயன்படுத்தியது. உடல் உறுப்புகள், மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர் சந்தேகம் வராமல் இருக்க உயிரிழந்த அனுராதாவின் தொலைபேசியிலிருந்து செய்திகளை அனுப்பியது என பல ஒற்றுமைகள். சந்திர மோகன் அனுராதாவுடன் உறவு கொண்டிருந்தார். அவரது வீட்டின் கீழ் தளத்தில் ஒரு பகுதியில் அவருக்கு தங்கும் வசதி செய்து கொடுத்தார். அனுராதா ஒரு கந்து வட்டிக்காரர்.

அனுராதா

சந்திர மோகன் அனுராதாவிடம் சுமார் ரூ 7 லட்சம்  வரை கடன் வாங்கியிருந்தார். கடனை திருப்பிச் செலுத்துமாறு அனுராதா அவருக்கு அழுத்தம் கொடுத்ததால், அவர் அனுராதாவை கொலை செய்ய திட்டம் தீட்டியதை ஒப்புக் கொண்டார்.  மே 12ம் தேதி பணப்பிரச்சனை காரணமாக  இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அதில் சந்திரமோகன், அனுராதாவை கத்தியால் தாக்கி, கொலை செய்தார்.  இதில் அனுராதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக  காவல்துறையினர் தெரிவித்தனர். சந்திர மோகன் அனுராதாவின் உடலை அப்புறப்படுத்த இரண்டு சிறிய கல் வெட்டு இயந்திரங்களை வாங்கி உடலை 6 பகுதிகளாக வெட்டினார் என பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். மே 15ம் தேதி சந்திரமோகன் தலையை ஆட்டோவில் குப்பை கொட்டும் இடத்திற்கு கொண்டு வந்து அப்புறப்படுத்தி விட்டு சென்றுள்ளார்.  துர்நாற்றத்தை மறைக்க  டெட்டால், வாசனை திரவியங்கள், ஊதுபத்தி குச்சிகள், கற்பூரம் இவைகளை பயன்படுத்தியுள்ளார்.  சந்திர மோகன் அனுராதாவின் மொபைலில் இருந்து அவருடைய உறவினர்களிடம் வாட்ஸ் அப் மூலம் தொடர்பில் இருந்ததால் அவர்களுக்கு சந்தேகம் எதுவுமே வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web