அதிர்ச்சி... பஸ் சக்கரத்தில் சிக்கிய இளம்பெண்... வெளியான சிசிடிவி காட்சி!

 
ரம்யா

அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் தந்தைக்கு சாப்பாடு கொடுத்து விட்டு, வீட்டிற்கு தனது டூ வீலரில் திரும்பிக் கொண்டிருந்த இளம்பெண் ரம்யா (25) மினி பஸ்ஸின் சக்கரத்தில் சிக்கி, பரிதாபமாக உயிரிழந்துள்ளார். ஒரே வண்டியில் மூன்று இளம்பெண்கள் பயணித்துள்ளனர். யாருமே ஹெல்மெட் அணியவில்லை. இந்த விபத்து குறித்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. டூ வீலரில் சென்று கொண்டிருந்த பெண்கள், பேலன்ஸ் இல்லாமல் அருகிலேயே வந்து கொண்டிருந்த மினி பஸ் மீது விழுகிறார்கள். இதில் வண்டியை ஓட்டிச் சென்ற ரம்யா, பேருந்து சக்கரத்தில் சிக்கி,பேருந்து ரம்யா மீது ஏறி இறங்குகிறது.

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தை அடுத்துள்ள அடையக்கருங்குளத்தில் வசித்து வருபவர் குமார். இவரது மகள் ரம்யா (25). ரம்யாவும், அவரது அண்ணி பிலோமீனா, அண்ணி மகள் ஹென்சி ஆகிய மூன்று பேரும் இருசக்கர வாகனத்தில் அம்பையில் இருந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். 

அப்போது பின்னால் வந்த மினி பேருந்து பைக்கை முந்தி செல்லும் போது எதிர்பாராத விதமாக பைக்கின் மீது மோதியதில் மூவரும் நிலைதடுமாறி கீழே விழுந்தனர். இதில் ரம்யா மீது மினி பேருந்தின் பின்சக்கரம் ஏறி இறங்கியது. 

அங்கிருந்தவர் உடனடியாக அவரை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அம்பை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

ரம்யா

மேலும் இந்த சம்பவம் நடந்த காட்சிகள் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள நிலையில் தற்போது அந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும் அம்பையில் பெரும்பாலான மின் பேருந்துகள் சாலை விதிகளை முறையாக பின்பற்றுவதும் இல்லை, இதற்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை என்பதால் இது போன்று விபத்துக்கள் நடக்கின்றன என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

From around the web