தங்கம் விற்கிற விலையில... 2 கிலோ தங்க நகைகளை அணிந்து பீடா விற்கும் கடைக்காரர்... வைரலாகும் வீடியோ!

 
சந்த்

நம்மூர் ஹரிநாடார் எல்லாம் சத்தமில்லாம ஓரமாய் போய் விளையாடுங்க.. ஒரு கட்சியும் இல்லை... எந்த கொடியும் கிடையாது. சுமார்  ரூ.2 கோடி மதிப்புள்ள தங்க நகைகளை அணிந்து கொண்டு ராஜஸ்தானைச் சேர்ந்த ஒருவர் பீடா விற்பனை செய்து வரும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ராஜஸ்தான் மாநிலத்தில் இவரது கடை வாடிக்கையாளர்கள், இவரை அன்புடன் நடமாடும் நகைக்கடை என்றே அழைக்கிறார்கள். ரூ.2 கோடி மதிப்பிலான தங்க நகைகளை அணிந்தபடி பீடா கடையில் அமர்ந்து, சாவகாசமாக பீடா வியாபாரம் செய்து வரும் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது.


ராஜஸ்தான் மாநிலம் பிகானர் மாவட்டத்தில் சத்தா பஜாரில் முல்சா புல்சா என்ற பீடா கடை, கடந்த மூன்று தலைமுறையாக  ஏறக்குறைய 95 வருடங்களாக அந்த பகுதியில் செயல்பட்டு வருகிறது.  தாத்தா காலத்திற்கு பின்னர், தந்தை பார்த்து வந்த கடையை இப்போது மகன் பார்த்து வருகிறார். 
கடைக்கு பெரும்பாலும் ரெகுலர் கஸ்டமர்கள் வந்து சென்றாலும், கடையில் கம்பீரமாக நகைகளை அணிந்து அமர்ந்திருக்கும் சந்த்தை வேடிக்கைப் பார்ப்பதற்காகவும் வாடிக்கையாளர்கள் கடையைத் தேடி வருகிறார்கள். 

சந்த்
உடல் முழுவதும் ஏராளமான தங்க நகைகளை அணிந்து கொண்டு சந்த் கடையில் அமர்ந்திருப்பதை பார்க்க நாள் முழுவதும் பலரும் வந்து செல்வதால் எப்போதும் கடையில் கூட்டம் அதிகரித்தே காணப்படுகிறது. வெகு தொலைவில் இருந்தும் கடையைத் தேடி வரும் வாடிக்கையாளர்கள் ஆசையாக பீடாவை வாங்கிக் கொண்டு, அவருடன் செல்ஃபி புகைப்படங்களையும் எடுத்து செல்கின்றனர். இவர் அணிந்திருக்கும் நகைகளுக்கும், கடையில் விற்பனை செய்யும் பீடாவிற்கும் சம்மந்தமேயில்லை. கடையில் அதிகபட்ச பீடாவின் விலை ரூ.20 தான். இரண்டே வகைகள் தான். ரூ.15க்கு ஒரு பீடா. ரூ.20க்கு ஒரு பீடா. 
காதில் கடுக்கண், கை நிறைய பட்டை பட்டையாக பிரேஸ்லெட்டுகள், தங்க செயின்கள் உட்பட இரண்டு கிலோ எடையிலான தங்க நகைகளை அணிந்து வியாபாரம் செய்து வருகிறார் சந்த்.

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!