ஆமைக்கறி தட்டுப்பாடு.. ஏ.ஐ மூலமாக சைவ ஆமை சூப் தயாரிப்பு.. வியப்பில் மக்கள்!

 
சைவ ஆமை சூப்

சிலியில் உள்ள ஒரு உணவு நிறுவனம் AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஆமை சூப்பிற்கு மாற்றாக சைவ ஆமை சூப்பைக் கொண்டு வந்துள்ளது. லத்தீன், அமெரிக்க மற்றும் தெற்காசிய நாடுகளில் ஆமை சூப் மிகவும் பிரபலமானது. ஆமை கறியை வேகவைத்து செய்யப்படும் இந்த சூப், அவர்களின் உணவு கலாச்சாரத்துடன் பின்னிப் பிணைந்துள்ளது.

சமீபகாலமாக வேட்டையாடுதல் அதிகரித்துள்ளதால், சூப் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பச்சை ஆமைகள் வேகமாக அழிந்து வருகின்றன. இதனால் பச்சை ஆமை மிகவும் ஆபத்தான உயிரினங்களின் சிவப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. சிலி நாட்டு உணவு நிறுவனமான நாட்கோ தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஆமை சூப் பிரியர்களுக்காக சைவ ஆமை சூப்பை தயாரித்துள்ளது.  ஏ.ஐ. பச்சை ஆமையின் சுவைக்கு ஒரு நெருக்கமான  சூப் சுவையை கண்டுபிடித்துள்ளது.

ஆமை சூப்பை தயாரிக்க 3 லட்சம் தாவரங்கள் மற்றும் பல்லாயிரக்கணக்கான தாவர கலவைகளை ஆராய்ச்சி செய்துள்ளது. இறுதியில், ஆமை சூப் போன்ற சுவை கொண்ட தாவர புரதங்களைக் கண்டுபிடித்து,  சைவ ஆமை சூப் மெனுவை உருவாக்கியுள்ளது. இந்த சூப் தற்போது விற்பனைக்கு இல்லை என்றாலும், அதை எவ்வாறு தயாரிப்பது என்பது குறித்த ஆன்லைன் பயிற்சிகளை நாட்கோ வழங்குகி வருகிறது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web