பகீர் சிசிடிவி காட்சிகள்... ஓசியில பைக்கை ரிப்பேர் செய்து தரல... மெக்கானிக் மீது எஸ்ஐ கொடூரத் தாக்குதல்!
பைக்கை ஓசியில் ரிப்பேர் செய்து தராததால் மெக்கானிக்-ஐ கொடூரமாக தாக்கிய SI -
— Tamil Janam (@TamilJanamNews) January 6, 2025
அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் வெளியீடு#MADURAI | #police | #bike | #tamiljanam | #மதுரை | #தமிழ்நாடு | #NewsUpdate | #bikerepair | #cctv pic.twitter.com/alyPM7xbHr
தற்போது பாலமேடு காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் அண்ணாதுரை . இவர் சில மாதங்களுக்கு முன்பு தனது காவல் நிலையத்தில் பணிபுரியும் மற்றொரு காவலர் மூலம் தனது இருசக்கர வாகனத்தை கொடுத்து ஒர்க்க்ஷாப்பில் பழுது நீக்க கோரியுள்ளார். ஆனால் சீனிவாசன் பழைய பாக்கி இருப்பதாகவும், பழைய பாக்கி தந்தால் மட்டுமே வேலை பார்ப்பதாகவும் கூறி வேலை பார்க்காமல் இருந்துள்ளார். இதன் பிறகு அண்ணாதுரை தொடர்ந்து சீனிவாசனை தொலைபேசியில் அழைத்து வாகனத்தை வேலை பார்க்குமாறு கூறியுள்ளார். அதனால் சீனிவாசன் அண்ணாதுரை அழைப்பை எடுக்கவில்லை. ஆத்திரத்தில் காவல் உதவி ஆய்வாளர் அண்ணாதுரை, கடந்த 4 ம் தேதி கார் ஒன்றில் மற்றொரு காவலருடன் சீனிவாசனின் ஒர்க் ஷாப்பிற்கு சென்று சீனிவாசனை வாகனத்தில் ஏறுமாறு மிரட்டி அவரைத் தாக்கியுள்ளார். அத்துடன் “என் வாகனத்தையா வேலை பார்க்க மாட்டாய்... உன் மீது கஞ்சா வழக்கு போட்டுடுவேன்” என மிரட்டி வாகனத்தில் ஏற்ற முயற்சித்ததாக கூறப்படுகிறது.
இது குறித்த சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதனைத் தொடர்ந்து சீனிவாசன் மதுரை மாவட்ட கண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சியர், முதல்வர் தனிப்பிரிவு மனித உரிமை கழக ஆணையம் என பல்வேறு துறைக்கு புகார் மனு அளித்து உதவி ஆய்வாளர் அண்ணா துரையின் மீது நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளித்துள்ளார். காவல்துறை உதவி ஆய்வாளர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தை இலவசமாக பழுது நீக்கித் தருமாறு கூறி ஒர்க்க்ஷாப் உரிமையாளரை தாக்கிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!
மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!
ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!