மகளை கொன்று விட்டு நாடகமாடிய சித்தி... விசாரணையில் அதிர்ந்த போலீசார்... தந்தையும் கைது!

 
ராதிகா

ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் பகுதியில் சந்திரசேகர் - சுமதி தம்பதி வசித்து வந்தனர். சந்திரசேகர் ராணுவ வீரர் ஆவார். இந்த தம்பதிக்கு 2016ஆம் ஆண்டு பெண் குழந்தை பிறந்த நிலையில், அடுத்த இரண்டு மாதங்களில் உடல்நலக்குறைவால் சுமதி உயிரிழந்துவிட்டார். இதனால் கைக்குழந்தையுடன் சந்திரசேகர் வசித்துவந்தார்.

இந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் நாட்டேரி கிராமத்தைச் சேர்ந்த ராதிகா என்ற பெண்ணை சந்திரசேகர் 2-ஆவதாக திருமணம் செய்தக் கொண்டார். சந்திரசேகர், ராதிகா, முதல் மனைவிக்கு பிறந்த குழந்தை அனைவரும் ஒன்றாக வசித்து வந்தனர். இதனிடையே சந்திரசேகரின் முதல் மனைவிக்கு பிறந்த சிறுமி கடந்த ஆண்டு மே மாதம் மயக்கம் ஏற்பட்டதாகக் கூறி, சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

ராதிகா

அப்போது பரிசோதனை செய்த மருத்துவர்கள், சிறுமி ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனால் சந்திரசேகர் பெரும் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். எனினும் எவ்வித தகவலும் போலீசாருக்கு கிடைக்கவில்லை. இந்தநிலையில், ஓராண்டுக்குப் பின் சிறுமியின் மரணத்தில் மர்மம் விலகியுள்ளது.

அதாவது, சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கையில் பகீர் தகவல் வெளியாகியுள்ளன. அதில், தலையணை வைத்து அமுக்கியதால் மூச்சு திணறி சிறுமி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சிறுமியின் சித்தியான ராதிகா மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. அப்போது கிடுக்குபிடி விசாரணையில் ராதிகா தான் குழந்தையை கொன்றது அம்பலமானது. 

ராதிகா

மேலும் உண்மை தெரிந்தும் வெளியே கூறாமல் மறைத்து நாடகமாடிய அவரது கணவர் சந்திரசேகரனையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கணவரின் உடந்தையில் முதல் மனைவியின் பிள்ளையை கொலை செய்த சம்பவம் அந்தப் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

 

From around the web