சிக்கிம் : 31 இடங்களில் அமோக வெற்றி... மண்ணைக் கவ்விய பாஜக, காங்கிரஸ்!

 
சிக்கிம்

இந்தியாவில் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட  மக்களவை தேர்தலுடன் சிக்கிம், ஒடிசா, ஆந்திர பிரதேசம், அருணாச்சல பிரதேசம்  மாநிலங்களுக்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. ஒடிசா மற்றும் ஆந்திர பிரதேசத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலுக்கான முடிவுகள் ஜூன் 4ம் தேதி வெளியாக உள்ளன. அதே நேரத்தில்  சிக்கிம் மற்றும் அருணாச்சல பிரதேச மாநிலத்திற்கான சட்டப்பேரவையின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைவதால், இன்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.


சிக்கிம் மாநிலத்தில் மொத்தமுள்ள 32 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடைபெற்றது. அதில், பதிவான வாக்குகள் பலத்த பாதுகாப்புடன் இன்று காலை 6 மணிமுதல் எண்ணப்பட்டு வருகின்றன.  இதில், ஆளும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா 31 தொகுதிகளில் வெற்றி பெற்று வாகை சூடியது.  பா.ஜ.க., காங்கிரஸ் உட்பட  மற்ற கட்சிகள் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.

சிக்கிம் மாநிலத்தில் ஆட்சியமைக்க 17 இடங்களில் வெற்றி பெற வேண்டிய நிலையில் ஆளும் சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா 31 இடங்களைக் கைப்பற்றி வரலாற்று வெற்றி பெற்றுள்ளது.இதனால்  ஆட்சியை மீண்டும் தக்க வைத்துள்ளது.  இதுகுறித்து  பிரதமர் மோடி  சிக்கிம் மாநிலத்தில் பாஜகவிற்கு வாக்கு செலுத்தியவர்களுக்கு தனது நன்றிகள். அதே நேரத்தில் சிக்கிம் மாநிலத்தின் முன்னேற்றத்திற்காக பாஜக நிச்சயம் துணை நிற்கும் எனக் கூறியுள்ளார்.  

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web