கையில் சிலம்பு... கண்களில் ஆக்ரோஷம்... நடிகை குஷ்பு மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

 
குஷ்பு

நேற்று காலை மதுரையில் பாஜக மகளிர் அணியினர் நடத்த இருந்த நீதி பேரணிக்கு போலீசார் அனுமதி மறுத்த நிலையில், பேரணியில் கலந்துக் கொள்வதற்காக பாஜகவைச் சேர்ந்த நடிகை குஷ்பு சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை சென்ற நிலையில், போலீசாரின் தடையை மீறி பேரணியில் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றதால் நடிகை குஷ்பு உள்ளிட்ட பாஜக நிர்வாகிகளை போலீசார் கைது செய்தனர்.

குஷ்பு

இந்நிலையில் நடிகை குஷ்பு உள்ளிட்ட பாஜகவினர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக கைது செய்யப்பட்ட குஷ்பு உள்ளிட்ட பாஜக மகளிரணியினரை மதுரை சிம்மக்கல்  ஒர்க்ஷாப் சாலை பகுதியில் உள்ள ஆட்டுமந்தை மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

பாஜக

நேற்று காலை 11.30 மணியளவில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் சுமார் ஆறரை மணி நேரத்திற்கு பின்பு போலீசார் விடுவித்தனர். ஆட்டு மந்தையில் கைது செய்யப்பட்டவர்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்தது சர்ச்சையைக் கிளப்பியது குறிப்பிடத்தக்கது. முன்னதாக மதுரை, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டங்களில் நேற்று முன் தினம் இரவு முதலே பாஜக  மகளிரணி நிர்வாகிகளை வீட்டை விட்டு வெளியேறாதபடி போலீசார் வீட்டு சிறையில் வைத்திருந்ததும் கண்டனங்களைக் குவித்து வருகிறது. 

2025 புத்தாண்டு இந்த 6 நட்சத்திரத்தில் பிறந்தவங்களுக்கு தான் அதிர்ஷ்ட மழை!

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web