அச்சச்சோ... சிறுத்தையைத் தொடர்ந்து குடியிருப்பு பகுதியில் பதுங்கிய முதலை... தெறித்து ஓடிய பொதுமக்கள்!
கடும் வெப்பம் காரணமாக, குடிநீர் மற்றும் உணவு தேடி வனவிலங்குகள் குடியிருப்பு பகுதியில் சுற்றித்திரிவது வாடிக்கையாகிவிட்டது.தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே கடம்பங்குடி கிராமத்தில் உள்ள தனது தோட்டத்தை பார்வையிட காந்திராஜ் இன்று காலை வந்தார். அப்போது வீட்டின் பின்புறம் ஏதோ ஊர்ந்து செல்வதை பார்த்து சந்தேகம் அடைந்தார்.

முதலில் பாம்பு என்று நினைத்து அருகில் சென்று பார்த்தார். அப்போது தான் அது பாம்பு அல்ல முதலை என்பது தெரிய வந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உடனடியாக வருவாய்த்துறை மற்றும் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இதனிடையே குடியிருப்பு பகுதிக்குள் முதலை புகுந்ததை பார்த்து அப்பகுதி மக்கள் அலறியடித்து தங்களில் ஒன்றா அல்லது வேறு முதலைகள் வந்ததா என நினைத்து அலறியடித்து ஓடினர்.

பின்னர் அதை பாதுகாப்பாக வேனில் ஏற்றி கொள்ளிடம் ஆற்றில் விட்டனர். இந்த முதலை தண்ணீருக்காக இரவு முழுவதும் நீண்ட தூரம் பயணித்து இந்த பகுதிக்கு வந்திருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
தமிழ் புத்தாண்டில் பணமழை கொட்டப்போகும் ராசிகள்!
அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!
