பகீர்... வெட்டுக்கிளி, பட்டுப்புழு 16 வகையான பூச்சியினங்களை சாப்பிட அனுமதி!

 
பூச்சி
 சிங்கப்பூரில் மக்கள் புழுக்கள் மற்றும் பூச்சிகள் இவைகளை சாப்பிட  அந்நாட்டு உணவு கழகம்  அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி வெட்டுக்கிளிகள், பட்டுப்பூச்சிகள் உட்பட   16 வகையான பூச்சிகளை இனி சமைத்து சாப்பிடலாம். இதனை  மக்கள் விரும்பி வாங்கி செல்வதற்கு எதுவாக மெனுக்களில் புதிய டிஷ் பெயரையும் உணவகங்களில் சேர்க்கலாம்.  இந்த பூச்சிகளை கடல் உணவுகளுடன் சேர்த்து பரிமாறலாம் எனத் தெரிவித்துள்ளது.

பூச்சி

 இந்த வகையான உணவுகளை 30 வயதுக்கு மேற்பட்ட அனைவருமே விரும்பி  வாங்கி சாப்பிடுவதாக கூறப்படுகிறது.  தங்களுடைய ஒரே டிஷ்ஷில் அனைத்து வகையான பூச்சி இனங்களும் இருக்க வேண்டும் என்றும் சாப்பிடுபவர்கள் விரும்புகிறார்கள். சிங்கப்பூரில் ஒரு சில விடுதிகளில் 16 பூச்சி உணவு வகைகள் மட்டும் இன்றி சில விடுதிகளில் 30 பூச்சி உணவு வகைகளும் மெனு கார்டில் புதிதாக இடம் பிடித்துள்ளன.  இருப்பினும் இவ்வகை பூச்சிகள் உணவு பாதுகாப்பு கட்டுப்பாட்டு விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும். மேலும் விரைவில் பூச்சிகள் மற்றும் அவை சார்ந்த பொருட்களை சீனா உட்பட மற்ற  வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யவும் சிங்கப்பூர் நடவடிக்கை எடுத்து  வருகிறது.

பூச்சி


சுற்றுலாப் பயணிகளிடம் உணவு விற்பனையை அதிகரிக்கவும், வாடிக்கையாளர்களை கவரவும் இந்த பூச்சிகள் உணவு மெனுக்கள் உதவும் என உணவகங்கள்,  ஹோட்டல்கள், கபேக்கள் தெரிவித்துள்ளன. சீனா, தாய்லாந்து  நாடுகளில் இருந்து பூச்சிகளை இறக்குமதி செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா,  நியூசிலாந்து  நாடுகளில் ஊட்டச்சத்து தேவைக்காக பூச்சிகள் உணவாக உட்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.   

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web