பித்ரு தோஷம் நீங்க வீட்டிலிருந்தபடியே எளிய பரிகாரம் | மகாளய அமாவாசையில் மறந்துடாதீங்க!
இன்று நாடு முழுவதும் இந்துக்கள் மகாளய அமாவாசை விரதத்தைக் கடைப்பிடித்து வருகின்றனர். மறந்தவர்களுக்கு மகாளய அமாவாசை என்பார்கள். வருடம் முழுவதும் அமாவாசை திதிகளில் தர்ப்பணம் தர மறந்தவர்களும், பெற்றோர்கள், முன்னோர்களின் இறந்த தேதியையும், திதியையும் மறந்தவர்களும் இந்த மகாளய அமாவாசையன்று தர்ப்பணம் கொடுத்தால் அந்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
இந்நிலையில், இன்று தர்ப்பணம் தர இயலாதவர்கள், வெளியூர்களில் வசிப்பவர்கள், வெளிநாட்டில் வசிப்பவர்கள் என தர்ப்பணம் கொடுக்க முடியவில்லையே என்று தவிக்க தேவையில்லை. மகாளய அமாவாசை தினத்தில் என்ன செய்வது என்ற குழப்பத்திலும் பித்ருக்களின் ஆன்மாக்கள் சாந்தி அடைய கடைப்பிடிக்க வேண்டிய விரத முறைகள் குறித்தும் சமூக வலைதளங்களில் தேடி வருகின்றனர்.
மகாளய அமாவாசை என்பது இந்துக்களுக்கு மிக மிக முக்கியமான நாளாகும். அன்றைய தினம் ஊரடங்கால் கடல் மற்றும் ஆறுகளில் நீராடி தர்ப்பண பூஜை செய்ய இயலாவிட்டாலும் பரவாயில்லை. முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டியவர்கள் இன்று தங்கள் வீட்டிலேயே அதிகாலையில் எழுந்து குளித்து, விரதம் தொடங்கி விட வேண்டும் காலையில் முழுவிரதம் இருந்து மனதில் வீட்டு பெரியோர்கள், முன்னோர்களை வணங்கி மதியம் சாப்பாடு தயாரித்து சூரியன் வந்ததும் படையலிட வேண்டும். சூரியன் இல்லாத ஊர், நாடு ஏது? அதனால் எங்கிருந்து வேண்டுமானாலும் இதைச் செய்யலாம்.
சாப்பிடுவதற்கு முன்பு பசு மாட்டிற்கு அகத்திக்கீரை வழங்கியும், காகங்களுக்கு சாதம் வைத்தும், ஆதரவற்றவர்களுக்கு உணவு அளித்தும் இருக்க வேண்டியது அவசியம். பசு மாடும், காகமும் இல்லாவிடடாலும் ஏழை எளியவருக்கு அன்னதானம் செய்யுங்க. இதன் பிறகு கடவுளை வழிபட்டு மதியம் உணவு சாப்பிட்டு விரதத்தை பூர்த்தி செய்யலாம். இதன் மூலம் முன்னோர்களின் ஆத்மா சாந்தியடையும்.
அக்டோபரில் பிறந்தவங்க அதிர்ஷ்டசாலிகள்... இது எல்லாமே அவங்களோட இயல்புகளா இருக்கும்!
செல்வம் நிலைத்திருக்க புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு, பலன்கள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
நவராத்திரி... வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு இதை கொடுத்தால் செல்வம் சேரும்!