எளிய பரிகாரம்... வெள்ளிக்கிழமை இதை செய்தா.. பணப் பிரச்சனைகள் தெறிச்சு ஓடிடும்!

 
ரூபாய் பணம்

தீராத பணப்பிரச்சனைகளில் தவிக்கிறீர்களா? கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணம் உங்கள் கைகளில் சேராமல் செலவாகி கொண்டே இருக்கிறதா? உங்களுக்கான கட்டுரை தான் இது. பொதுவாகவே வெள்ளிக்கிழமைகள் விசேஷமானவை. வெள்ளிக்கிழமைகளில் இந்த ஒரு விஷயத்தை மட்டும் தொடர்ந்து செய்துக்கிட்டே வாங்க.. ரொம்ப எளிமையான விஷயங்கள் தான். ஆனா, இவை தான் உங்க வாழ்க்கையை மாற்றப் போகுது. குறிப்பா வெள்ளிக்கிழமைகளில் மறக்காம இதைச் செய்துக்கிட்டு வாங்க.. அப்புறமா உங்க பிரச்சனைகள் எல்லாம் தெறிச்சு ஓடிடும்.

வெள்ளிக்கிழமை ரொம்பவும் முக்கியமான நாள். அதிர்ஷ்டம், பணம், செல்வம், நிம்மதி, செழிப்பு, வசதி என நீங்கள் எத்தனைப் பேர் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள். அதற்கு எல்லாம் முக்கியமான கிழமையாக இருப்பது வெள்ளிக்கிழமை தான். அதே சமயம், இத்தனையையும் தரும் மகாலட்சுமி எங்கே எல்லாம் வாசம் செய்கிறாள் என்று தெரியுமா? வாசனையான, சுகந்தம் தரும் பொருட்களில் எல்லாம் நிச்சயமாகவும், நிரந்தரமாகவும் மகாலட்சுமி வாசம் செய்கிறாள். அதுவும், வெள்ளிக்கிழமைகளில் வீடுகளில் சாம்பிராணி  தூபம் போட்டால் மகாலட்சுமி அந்த வீட்டில் நிரந்தரமாகவே சந்தோஷத்துடன் வாசம் செய்வாள் என்பது ஐதீகம். இது காலம் காலமாக நம் வீடுகளில் பின்பற்றப்பட்டு வருகிறது.  

தனித்த சாம்பிராணி என்று இல்லாமல் நம் தேவைகளுக்கேற்ப சாம்பிராணியுடன் சில பொருட்களைச் சேர்த்து தூபம் இட வீட்டில் மங்கலங்கள் நிறையும் என்பது உறுதி. அந்த வகையில் சாம்பிராணியுடன் எந்தெந்த பொருட்களை சேர்த்தால், என்னென்ன பலன்களைப் பெறலாம் என்று தெரிந்துக் கொள்ளுங்கள். உங்கள் பிரார்த்தனைக்கேற்ப பலனைப் பெறுங்கள். 

வெள்ளிக்கிழமை இதை மட்டும் செய்து பாருங்க!

 • சாம்பிராணியில் தூபம் போட்டால் கண் திருஷ்டி, பொறாமை ஆகியவை நீங்கி முன்னேற்றம் கிடைக்கும்.
 • சாம்பிராணியில் அகில் சேர்த்து தூபமிட குழந்தைபேறு உண்டாகும்.
 • சாம்பிராணியில் தூதுவளையை சேர்த்து தூபமிட வீட்டில் தெய்வ அருள் நிலைத்திருக்கும்.
 • சாம்பிராணியில் சந்தனத்தை சேர்த்து தூபம் போட லட்சுமி கடாட்சம் கிடைக்கும்.
 • சாம்பிராணியில் அருகம்புல் பொடியை சேர்த்து தூபமிட சகல தோஷங்களும் நிவர்த்தி ஆகும்..
 • சாம்பிராணியில் வெட்டிவேரை சேர்த்து தூபமிட காரியசித்தி உண்டாகும்.
 • சாம்பிராணியில் வேப்பிலையை சேர்த்து தூபமிட சகல நோய்களில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும்.
 • சாம்பிராணியில் வெண்கடுகை சேர்த்து தூபமிட பகைமை விலகும்.

வெள்ளிக்கிழமை இதை மட்டும் செய்து பாருங்க!

 • சாம்பிராணியில் வெண்குங்கிலிய பொடியை சேர்த்து தூபமிட துஷ்ட சக்திகள் விலகும்.
 • சாம்பிராணியில் ஜவ்வாது சேர்த்து தூபமிட திடீர் அதிர்ஷ்டம் உருவாகும்.
 • சாம்பிராணியில் வேப்பம்பட்டையை சேர்த்து தூபமிட ஏவல் பில்லி சூன்யம் ஆகியவை விலகும்.
 • சாம்பிராணியில் நாய் கடுகை சேர்த்து தூபமிட துரோகிகள் நம்மை விட்டு விலகுவார்கள்.
 • சாம்பிராணியில் காய்ந்த துளசியை சேர்த்து தூபமிட்டால் காரியத்தடை மற்றும் திருமணத்தடை ஆகியவை விலகும்.
 • சாம்பிராணியில் கரிசலாங்கண்ணி பொடியை சேர்த்து தூபமிட மகான்களின் ஆசிகள் கிடைக்கும்.
 • சாம்பிராணியில் நன்னாரி வேரின் பொடியை சேர்த்து தூபமிட சகல ஐஸ்வர்யம் கிடைக்கும்.
 • சாம்பிராணியில் மருதாணி இலை பொடியை சேர்த்து தூபமிட மகாலட்சுமி வாசம் நிலைக்கும்
  

ஒரே புடவைக்காக குடுமிபுடி சண்டைப்போட்ட இளம்பெண்! வைரலாகும் வீடியோ

வீடியோ!  5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!

வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

அடிக்கிற வெய்யில்ல அடுப்பில்லாமலே ஆம்லெட் போடும் இளைஞர்... வைரல் வீடியோ!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

From around the web