3,800க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரைக் காப்பாற்றிய பாடகி... நிதி உதவியால் கின்னஸ் சாதனை!

 
பாடகி பாலக் முச்சால் பாடகி பாலக் முச்சால்

மத்தியப் பிரதேச மாநிலத்தின் இந்தூரைச் சேர்ந்த பிரபல பின்னணி பாடகி பாலக் முச்சால், ஏழை குழந்தைகளின் இதய அறுவை சிகிச்சைக்காக நிதி திரட்டி வழங்கியதன் மூலம் கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார்.

பாலிவுட் திரைப்படங்களில் ஏராளமான பாடல்களைப் பாடிய பாலக், தமிழ், தெலுங்கு, மலையாளம், குஜராத்தி, மராத்தி உள்ளிட்ட பல மொழிகளில் தனது குரல் மாயத்தை வெளிப்படுத்தியுள்ளார். தமிழில் அனுஷ்கா நடித்த இஞ்சி இடுப்பழகி உள்ளிட்ட சில படங்களில் பாடியதன் மூலம் தென்னிந்திய ரசிகர்களிடையிலும் பிரபலமானார்.

பாடகி பாலக் முச்சால்

அவர் தனது சகோதரர் பலாஷ் முச்சால் உடன் இணைந்து ஒரு அறக்கட்டளை நடத்தி வருகிறார். அந்த அறக்கட்டளையின் மூலம் பொருளாதார வசதி இல்லாத குழந்தைகளின் இதய அறுவை சிகிச்சைக்காக நிதி திரட்டி வழங்கி வருகிறார். இதுவரை 3,800க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு அறுவை சிகிச்சை செய்ய தேவையான நிதி உதவி வழங்கியுள்ளார்.

பாடகி பாலக் முச்சால்

இந்த மனிதநேயப் பணிக்காக அவர் லிம்கா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்று பெருமை பெற்றுள்ளார். சமூக சேவையையும் இசையையும் இணைத்து சாதனை படைத்துள்ள பாலக் முச்சாலை பலர் வாழ்த்தி வருகின்றனர்.

இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்

ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை

ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க

வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!