அதிர்ச்சி வீடியோ.. போதையில் மெட்ரோ ஊழியரை தாக்கி பாடகர் வேல்முருகன் ரகளை!

 
வேல்முருகன்

சென்னையில் மெட்ரோ ரயில் பணியில் ஈடுபட்டிருந்த அதிகாரியிடம் தகராறு செய்து தாக்கியதாக பிரபல திரைப்பட பாடகர் வேல்முருகன் மீது விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.தமிழ் திரையுலகில் பிண்ணனி பாடகர்  வேல்முருகன். இவர் மீது விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னையின் பல்வேறு பகுதிகளில் மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில்  வடபழனி, விருகம்பாக்கம்  பகுதிகளில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருவதால் அந்த பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

வளசரவாக்கம் - ஆற்காடு சாலையில் மெட்ரோ ரயில் பணி நடைபெறுவதால் மெட்ரோ ஊழியர்கள் தடுப்பு அமைத்து வழிப்பாதையாக மாற்றியுள்ளனர். வளசரவாக்கம் - ஆற்காடு சாலை வழியாக நேற்று மாலை பிரபல பின்னணி பாடகர் வேல்முருகன் தனது காரில் சென்று கொண்டிருந்தார். எந்தவித முன்னறிவிப்பும் இன்றி சாலையை மூடி வேலை செய்வதாக மெட்ரோ பணியாளர்களிடம் பாடகர் வேல்முருகன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகத் தெரிகிறது. இது குறித்து கேட்க வந்த மெட்ரோ திட்ட உதவி மேலாளர் வடிவேலை  வேல்முருகன் அவதூறான வார்த்தையால் திட்டியதுடன் அவர் மீது  தாக்குதல் நடத்தியுள்ளார்.   

வேல்முருகன்
இந்த மோதலில் காயமடைந்த வடிவேல், அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அத்துடன்  அதிகாரி வடிவேல், விருகம்பாக்கம் போலீசில் புகார் அளித்தார்.இந்தப்  புகாரின் அடிப்படையில்  விருகம்பாக்கம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏற்கனவே இதே போன்று பாடகர் வேல்முருகன் மார்ச் மாதம் சென்னை விமான நிலையத்தில் மது போதையில் சென்று பாதுகாப்பு அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் . இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web