’சிங்கிள்ஸ் வரியா'.. போதையில் எல்லை மீறிய ஆசாமி.. குண்டுக்கட்டாக தூக்கி சென்ற போலீஸ் அதிகாரிகள்!

 
போதை இளைஞர்

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட செவிலிமேட்டிலிருந்து வெங்கடாபுரம் செல்லும் சாலையில், போதையில் 20 வயது வாலிபர் ஒருவர், அந்த வழியாக சென்ற பொதுமக்களை கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததால், அவ்வழியாக சென்ற பொதுமக்கள் அச்சத்துடன் சாலையை கடக்கும் நிலை ஏற்பட்டது. அப்போது சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தின் கண்ணாடியை மட்டையால் அடித்து சேதப்படுத்தியதுடன், அதை தட்டிக்கேட்க முயன்ற வாகனத்தின் உரிமையாளரையும் தாக்க முயன்றார்.

இந்நிலையில், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அந்த இளைஞரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.அப்போது, ​​படத்தில் வரும் டயலாக் போல, போலீஸ் முன், "சிங்கிள்ஸ் வரியா சண்டை போடலாம்" என்று வாகனத்தின் உரிமையாளரிடம் கூறினார். இதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் இருக்க போலீசார் ரோந்து பணியை விரிவுபடுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web