‘ஐயா.. என் ஆடுகளைக் காணவில்லை..’ கண்டுபுடிச்ச கொடுப்பவருக்கு தக்க சன்மானம்.. பரிதவிக்கும் உரிமையாளர்

 
கடம்பத்தூர் ஆடு

என் ஆடுகளைக் காணவில்லை. கண்டுபுடிச்சு தாங்க.. தக்க சன்மானம் தருகிறேன் என்று தான் வளர்த்த ஆடுகள் காணாமல் போனது குறித்து போஸ்டர் அடித்து ஊர் முழுவதும் ஒட்டி தன் ஆடுகளை பரிதவிப்புடன் தேடி வருகிறார் அதன் உரிமையாளர். திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூர் சர்ச் தெருவைச் சேர்ந்தவர் கார்த்தி (எ) கார்த்திகேயன் (38). இவர் கடம்பத்தூரில் உள்ள கறிக்கடையில் வேலை செய்து வருகிறார். இவர் தனது வீட்டில் 10க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார்.  இந்நிலையில், கடந்த 26ம் தேதி தான் வளர்த்து வந்த 2 ஆடுகள் திடீரென  காணாமல் போனது.

இதையடுத்து பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து கடம்பத்தூர் போலீசில் புகார் செய்தார். ஆனாலும் இதுவரை ஆடுகள் கிடைக்கவில்லை. இந்நிலையில் காணாமல் போன அவரது 2 ஆடுகளை கண்டுபிடித்து தருபவர்களுக்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும் என்று ஆங்காங்கே போஸ்டர் ஒட்டியுள்ளார்.’’ இது அந்த பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், அந்த போஸ்டரை அப்பகுதி மக்கள் வேடிக்கை பார்த்துக் வருகின்றனர்.

காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா!

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web