சிட்டிங் எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமி மறைவு... வால்பாறை தொகுதி காலியானதாக அறிவிப்பு!

கோவை மாவட்டம் வால்பாறை சட்டமன்ற தொகுதி சிட்டிங் எம்.எல்.ஏ.வாக இருந்தவர் அமுல் கந்தசாமி. இவர் திடீர் உடல் நலக்குறைபாடு காரணமாக ஜூன் 21ம் தேதி காலமானார்.
இந்நிலையில் வால்பாறை தொகுதியை காலியானதான தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகம் அறிவித்துள்ளது. பொதுவாக, ஒரு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டால், அதில் இருந்து 6 மாத காலத்துக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது தான் தேர்தல் ஆணைய விதி.
ஆனால், தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இன்னும் 9 மாதங்களில் நடைபெற உள்ள நிலையில் வால்பாறை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பு இல்லை என இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கனவே அறிவித்துவிட்டது. அதுவரை எம்.எல்.ஏ. இல்லாத தொகுதியாகவே வால்பாறை இருக்கும் தமிழக சட்டப்பேரவை செயலகம் அறிவிப்பு.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!