சிதறிய கட்டிடம்... சிவகாசி வெடி விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 7 ஆக உயர்வு; பலர் படுகாயம்!

 
பட்டாசு ஆலை

சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் 5 பெண்கள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மேலும் பலர் ஆலைக்குள் சிக்கி இருக்கலாம் என அச்சம் நிலவி வருகிறது.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள செங்கமலபட்டியில் சுதர்சன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு 7 அறைகளில் இன்று தொழிலாளர்கள் பட்டாசுகள் உற்பத்தி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

வெடி விபத்து

இந்த தீ விபத்து அடுத்தடுத்து உள்ள 7 அறைகளுக்கும் பரவியதில் அங்கிருந்த பட்டாசுகள் மற்றும் வெடி பொருட்கள் வெடித்து சிதறியது. 
இதனால் பல மீட்டர் உயரத்துக்கு புகைமண்டலம் பரவியது. பணியில் 16 பேர் இருந்ததாக கூறப்படும் நிலையில், இதுவரை 5 பெண்கள் உட்பட 6 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் பட்டாசுகள் தொடர்ந்து வெடித்து சிதறி வருவதால் தீயை அணைக்கும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

ஆம்புலன்ஸ்


இதனிடையே படுகாயம் அடைந்த 10க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் மற்றும் மாவட்ட வருவாய் துறை அதிகாரிகள் விபத்திற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!

இனி உச்சம்... பணமழை கொட்டப்போகும் ராசிகள்!

அப்படியே சாப்பிடுவேன்!! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!

From around the web