நடிகர் சிவராஜ் குமார் அறுவைச் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்கிறார்!

 
ராஜ்குமார்


கன்னட சினிமாவின்  நட்சத்திர நாயகன்  நடிகர் சிவராஜ்குமார். மறைந்த நடிகர் ராஜ்குமாரின் மகனும் புனித் ராஜ்குமாரின் சகோதரருமாவார்.  இவர், கன்னட மக்களிடம் மிகுதியான மதிப்புடன் இருந்து வருகிறார். ஜெயிலர் திரைப்படத்தில் சில காட்சிகளில் மட்டும் நடித்த சிவராஜ்குமார் தமிழ் ரசிகர்களிடமும் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளார்.  


இந்நிலையில், அமெரிக்கா செல்வதற்காக சிவராஜ்குமார்  சந்தித்து பேசியுள்ளார். விமான நிலையத்திற்கு  செல்வதற்கு முன்பு சிவராஜ்குமார் இது குறித்து  ” இந்தச் செய்தியை ஊடகங்கள் பெரிதுபடுத்தாததுக்கு மிக்க நன்றி. நடிகர்கள், ரசிகர்களிடமிருந்து எனக்கு வாழ்த்துகள் வந்ததுக்கு எனக்கு மகிழ்ச்சி. பரிசோதனையில் முக்கியமான காரணிகள் எல்லாம் நல்ல விதமாகவே இருக்கின்றன.

ராஜ்குமார்

திடீரென அறுவைச் சிகிச்சைக்காக செல்வது வீட்டில் பதற்றத்தை ஏற்படுத்தும். எனது குடும்பத்தினர், உறவினர்கள், ரசிகர்களை பார்க்கும்போது எனக்குமே சிறிது உணர்ச்சிவசப்படத் தோன்றுகிறது. அவர்களைப் பார்க்கும்போதுதான் கவலையாக இருக்கிறது. மற்றபடி நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.   

மார்கழி மாத விரத முறைகள், வழிபாடு, பலன்கள்!

ஐயப்ப பக்தர்கள் தினசரி சொல்ல வேண்டிய ஸ்லோகம் இது தான்!

ஐயப்பன் பக்தர்கள் தெரிஞ்சிக்கோங்க ... சபரிமலை சுவாரஸ்யங்கள்!

விட்டேனா பார்!! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!

From around the web