படகு கடலில் மூழ்கி 6 பேர் பலி.... 30 பேர் மாயம்... ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணி தீவிரம்!

இந்தோனேசியாவின் கெட்டபாங் நகரில் அமைந்துள்ள துறைமுகத்தில் இருந்து ஜூலை 2ம் தேதி புதன்கிழமை இரவு பாலி தீவு நோக்கி சுற்றுலா படகு சென்றுள்ளது. அந்த படகில் 65 பேர் பயணம் செய்தனர்.
இந்தப் படகு பாலி தீவின் அருகே சென்றபோது மோசமான வானிலை காரணமாக அலைகளில் சிக்கி படகு கடலில் மூழ்கி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து குறித்து அறிந்த மீட்புக்குழுவினர் விரைந்து வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர். இதில் கடலில் விழுந்து உயிருக்கு போராடிய 29 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.
ஆனால், இந்த சம்பவத்தில் 6 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அதேவேளை, படகில் பயணம் செய்த மேலும் 30 பேர் கடலில் மூழ்கி மாயமான நிலையில் அவர்களை தேடும் பணியில் கடற்படை கப்பல்கள், ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
பளபளக்கும் மிருதுவான சருமத்திற்கு இதை மட்டும் செய்தாலே போதும்!!
நாப்கின்களால் ஏற்படும் ரேசஸ் மற்றும் எரிச்சலை போக்க இயற்கை வழிகள்!!